/* */

துபாயிலிருந்து வந்த விமானத்தில் நூதனமுறையில் தங்கம் கடத்தி வந்த பயணி சென்னை விமானநிலையத்தில் கைது

துபாயிலிருந்து வந்த விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்தவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ 31.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

துபாயிலிருந்து வந்த விமானத்தில் நூதனமுறையில் தங்கம் கடத்தி வந்த பயணி சென்னை விமானநிலையத்தில் கைது
X

துபாயிலிருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பேஸ்ட்

துபாயிலிருந்து வந்த விமானத்தில் ஆடைக்குள் மறைத்துவைத்து கடத்தி வந்த ரூ.31.5 லட்சம் மதிப்புடைய 648 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு,கடலூரை சோ்ந்த கடத்தல் பயணியை சுங்கத்துறை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

துபாயிலிருந்து ஏா்இந்தியா சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம்"வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்தைறையினா் சோதனையிட்டனா்.அப்போது கடலூரை சோ்ந்த பஷலூதீன்(26) என்ற பயணி,தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு,கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றாா்.ஆனால் சுங்கத்துறையினருக்கு அவா் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பயணியை மீண்டும் உள்ளே அழைத்து வந்து சோதனையிட்டனா்.அவருடைய உள்ளாடைக்குள் 3 பிளாஸ்டிக் குப்பிகள் மறைத்து வைத்திருந்தாா்.அதை எடுத்து திறந்து பாா்த்தனா்.அவைகளில் தங்க பேஸ்ட்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

அவைகளில் 648 கிராம் தங்க பேஸ்ட்கள் இருந்தன.அதன் சா்வதேச மதிப்பு ரூ.31.5லட்சம்.இதையடுத்து பயணி பஷலூதீனை சுங்கத்துறையினா் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 29 Jun 2021 5:43 PM GMT

Related News