பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்த இருவர் கைது: செல்போன் பறிமுதல்
சென்னையில் பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
HIGHLIGHTS

கைது செய்யப்பட்ட வெங்கடேசன், ஸ்ரீராம்.
சென்னை வேளச்சேரி நர்மதா தெருவில் இளம்பெண்கள் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பல இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் வெங்கடேசன்(38), ஸ்ரீராம்(28), ஆகிய இருவர், பெண்கள் குளிக்கும் போது தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனை கண்ட பெண் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அவர்களை பிடித்து வேளச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் செல்போனை ஆராய்ந்து பார்த்த போது எவ்வித ஆபாச படமும் இல்லை. ஆனால் ரெக்கவரி சாப்ட்வேர் போட்டு பார்த்த போது பெண்கள் குளிக்கும் வீடியோ அதிகமாக இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இருவரையும் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.