/* */

அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு இன்று காலை டெல்லி சென்றது

நீட் தேர்வு பிரச்சினை தொடர்பாக அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றது

HIGHLIGHTS

அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு இன்று காலை டெல்லி சென்றது
X

சென்னை விமான நிலையத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி பேட்டி அளித்தார்.

நீட் தோ்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை, தமிழக எம்.பி.க்கள் குழுவினா் இன்று மாலை டெல்லியில் சந்திக்கின்றனா்.

அதற்காக தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவா் டி ஆர்.பாலு எம்.பி.தலைமையில் எம்.பி.க்கள் குழுவினா் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் இன்று அதிகாலை டெல்லி சென்றனர்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கூறுகையில்:-

தமிழ்நாட்டில் மருத்துவ கல்விக்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரி தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சி குழுவினர் டெல்லி செல்கின்றோம்.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு அவர்களின் தலைமையிலான தமிழகத்தின் அனைத்து கட்சி குழுவினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கட்டாயம் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்த இருக்கிறோம்.

ஏற்கனவே தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு இருந்து அது ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைவரும் மற்றும் அனைத்து கட்சியினரும் விரும்புவது தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விளக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

ஏற்கனவே சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதனை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டிய சூழல் உள்ளது.

மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை கட்டாயம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது அதை நம்பி செல்கின்றோம்.

Updated On: 17 Jan 2022 8:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்