/* */

குடும்பத்திற்கே கொலை மிரட்டல்: ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளிகள் கைது

சென்னை வேளச்சேரியில் குடும்பத்திற்கே கொலை மிரட்டல் விடுத்த ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குடும்பத்திற்கே கொலை மிரட்டல்: ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளிகள் கைது
X

கைது செய்யப்பட்டவர்களுடன் போலீசார் உள்ளனர்.

சென்னை வேளச்சேரி ராம்நகரை சேர்ந்தவர் தியாகராஜன்(62), இவர் சேலத்தில் உள்ள 20 ஏக்கர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.அந்த இடம் மலேசியாவை சேர்ந்த செல்லப்பா என்பவருக்கு சொந்தமானதாம்.

இரு தரப்பும் அவரவர் தங்களது இடம் என கூறிக் கொள்ளும் நிலையில், இடம் சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.இந்நிலையில் செல்லப்பா பிரபல ரவுடி சீசிங் ராஜாவை அணுகி தியாகராஜனை இடத்தை விட்டு விரட்ட வேண்டும் என கூறி ஒரு வேலை கொடுத்துள்ளார்.

சீசிங் ராஜாவும் தனது கூட்டாளிகள் மூவரை தியாகராஜன் வீட்டிற்கே அனுப்பி வைத்தார். வீட்டில் தியாகராஜன் இல்லாததால் அவரது மகள் மட்டும் இருந்த நிலையில் அங்கு சென்ற மூவர் செல்போனை அவரது மகளிடம் கொடுக்க அதில் சீசிங் ராஜா பேசி, சேலத்தில் உள்ள இடத்தில் இருந்து உங்க அப்பாவை ஒதுங்கிவிட சொல்லு, இல்லையென்றால், நான் பெரிய ரவுடி. குடும்பத்தோடு கொலை செய்து புதைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

பயந்து போன பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் வேளச்சேரி போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை செய்து சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றினர். சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி சீசிங் ராஜா, செல்லப்பா, உள்ளிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வில்லிவாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கிரிஸ்டோபர்(34), அம்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் தேவ பிரபு(31), ஆகிய இருவரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான செல்லப்பா, ரவுடி சீசிங் ராஜா உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Updated On: 25 July 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  2. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  3. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  6. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  7. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  8. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  9. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  10. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...