கத்திமுனையில் பெண் பாலியல் வன்புணர்வு : பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது

சென்னையில் தனியாக வசித்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கத்திமுனையில் பெண் பாலியல் வன்புணர்வு : பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கைது
X

கல்லூரி மாணவர் விஷால்.

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் 43 வயதான பெண். இவர் திருவல்லிகேணியில் ஒப்பந்த அடிப்படையில் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 20ம் தேதி மாலை 6 மணிக்கு பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பியபோது அவரது வீட்டின் வெளியே மர்ம நபர் ஒருவர் நின்றிருந்துள்ளார். யாரென கேட்ட போது அந்த மர்ம நபர் அத்துமீறி வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

பின்னர் அப்பெண்ணை நிர்வாணமாக படமெடுத்து வைத்துக் கொண்டு, செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்பு அன்றிரவே அந்த மர்ம நபர் பெண்ணுக்கு தொடர்பு கொண்டு போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது மகளிடம் கூற நேற்று திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் செல்போன் எண்ணை வைத்து மர்ம நபரை தேடி மெரினா பீச்சில் வைத்து கைது செய்தனர்.விசாரணையில் திருவல்லிகேணியை சேர்ந்த விஷால்(20), பாலிடெக்னிக் படிக்கும் 3ம் ஆண்டு கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.

அவர் மீது 294(B), 451, 376, 354(C), 506(1), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அடையார் அனைத்து மகளிர் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Updated On: 2022-05-22T15:51:43+05:30

Related News