/* */

ஐதராபாத்தில் இருந்து 1 லட்சத்து 26 ஆயிரம் கோவாக்சீன் தடுப்பூசி சென்னை வந்தன!

ஐதராபாத்தில் இருந்த 3ம் நாளாக 1லட்சத்து 26 ஆயிரம் டோஸ், கோவாக்சீன் தடுப்பூசிகள் விமானம் மூலமாக சென்னைக்கு வந்தன.

HIGHLIGHTS

ஐதராபாத்தில் இருந்து 1 லட்சத்து 26 ஆயிரம் கோவாக்சீன் தடுப்பூசி சென்னை வந்தன!
X

ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த கோவிசீல்டு மருந்துகள் அரசு மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லும் காட்சி.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உள்ளாா்.

மத்திய அரசிடம் இருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை என்றும், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குங்கள் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது.

தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் செய்தும் 1 கோடியே 3 லட்சம் கோவிட்ஷில்டு மற்றும் கோவாக்சீன் தடுப்பூசிகளும் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 98 லட்சம் பேர் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் மக்களுக்கு போட தடுப்பூசிகள் இல்லாததால் மூடப்பட்டன. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக 4 லட்சத்தி 64 ஆயிரம் கோவாக்சீன் மற்றும் கோவிட்ஷில்டு தடுப்பூசிகள் வந்தன.

இந்த நிலையில் காலை 9 மணிக்கு ஜதரபாத்தில் இருந்து 25 பெட்டிகளில் 1 லட்சத்தி 26 ஆயிரத்தி 270 கோவாக்சீன் தடுப்பூசிகள் வந்தன. விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அதுப்போல் மாலை மேலும் 3 லட்சம் கோபிட்ஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்திற்கு வந்த தடுப்பூசிகளை பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 12 Jun 2021 6:15 AM GMT

Related News