/* */

திருமணம் 5 மாதத்தில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை: போலீஸார் விசாரணை

திருமணம் 5 மாதத்தில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை

HIGHLIGHTS

திருமணம்  5 மாதத்தில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை: போலீஸார் விசாரணை
X

திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் மாமியார் கொடுமையால் 4 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு தனது மாமியார்தான் காரணம் ஆடியோ பதிவிட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி(25), கடந்த பிப்ரவரி மாதம் பெரியோர்களால் பார்த்து தி.நகரை சேர்ந்த குமரன்(37), என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.திருமணம் ஆன நாள் முதலே இந்திமதியை அவரது மாமியார் சாந்தி, ராசியில்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை, குறைவாக சாப்பிடு என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

திருமணம் ஆகி 5 மாதம் ஆன நிலையில் 4 மாத கர்ப்பிணியாக உள்ள பெண்ணை மாமியாரின், தொடர் துன்புறுத்தல் காரணமாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், உள்ள அம்மா வீட்டிற்கு வந்த பெண்ணை அழைத்து செல்லக்கூட கணவரும் வரவில்லை, கணவரும் தாய் பேச்சை கேட்டுக் கொண்டு நம்மை கண்டு கொள்வதில்லையே என்ற விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது அக்காவிற்கு வாட்சாப் மூலம் ஆடியோ ஒன்றில் என் சாவுக்கு குமரன் அம்மா தான் காரணம் நானும் பாப்பாவும் செல்கிறோம் என்று அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து பார்ப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார் உடலை மீட்டு இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து திருமணம் ஆகி 5 மாதமே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.4 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 24 July 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  2. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  3. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  6. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  7. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  8. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  9. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  10. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...