/* */

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை பீனிக்ஸ் மாலில் செல்பி பாய்ண்ட்

செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி பீனீக்ஸ் மாலில் அமைத்துள்ள செல்பி பாய்ண்ட் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

HIGHLIGHTS

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை பீனிக்ஸ் மாலில் செல்பி பாய்ண்ட்
X

சென்னை பீனிக்ஸ் மாலில் அமைக்கப்பட்டுள்ள செல்பி பாய்ண்ட் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி சென்னை பீனிக்ஸ் மாலில் அமைக்கப்பட்டுள்ள செல்பி பாய்ண்ட் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் மகாபலிபுரத்தில் வருகிற 28ம் தேதி நடைபெற உள்ளது. இதனை மக்களிடத்தில் கொண்டு செல்ல தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நேப்பியர் பாலம் சதுரங்கம் போல் வடிவமைத்துள்ளது, மேலும் பல்வேறு இடங்களில் குதிரை சட்டை அணிந்தவாறு தம்பி என்ற பெயருடம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மார்கெட் சிட்டியில் Click A Selfie Contest என்ற பெயரில் ஒரு செல்பி பாய்ண்டை ஏற்பாடு செய்துள்ளனர். பெட்டி போன்ற வடிவமைப்பு கொண்டுள்ளது உள்ளே கருப்பு வெளளை சதுரங்கம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது இங்கு நின்று பீனிக்ஸ் மால் வருவோர் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதில் செல்பி எடுத்து @CHENNAICHESS22 என்று சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்தால் அவர்களுக்கு இப்போட்டியினை காண வாய்ப்பு உள்ளது.

செல்பி எடுப்பவர்கள் சர்வதேச செஸ் போட்டி இங்கு நடப்பது பெருமையாகவும், செஸ் மீதான் ஈடுபாடும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். மேலும் அரசு பல்வேறு இடங்களில் செய்து இதனை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளதாகவும் கூறினர்.188 நாடுகளிலிருந்து, 343 அணிகள், 2000 வீரர்கள் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 July 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்