/* */

பராமரிப்பு பணிகளுக்காக சென்னை வந்த அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ் டிரியூ,

அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று இந்திய கப்பல் கட்டும் தளத்தில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

HIGHLIGHTS

பராமரிப்பு பணிகளுக்காக சென்னை வந்த அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ் டிரியூ,
X

பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிக்காக சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்திற்கு  வந்தடைந்த அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ் ட்ரியூ

பராமரிப்பு பணிகளுக்காக சென்னை வந்த அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ் டிரியூ,

அமெரிக்க கடற்படை கப்பலான சார்லஸ் டிரியூ பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகளுக்காக முதல் முறையாக சென்னை அருகே உள்ள எல் அன் டி காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது.

அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று இந்திய கப்பல் கட்டும் தளத்தில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். சென்னை எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் எல்.அன்.டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் செயல்பட்டு வருகிறது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினரின் தேவைக்காக புதிய கப்பல்களை கட்டுதல் பராமரித்தல் பழுது பார்க்கும் பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க கடற்படை கப்பலான சார்லஸ் டிரியூ பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் படிக்காக காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது.

இதற்கான சிறப்பு நிகழ்ச்சி கப்பல் கட்டும் தள வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது சார்லஸ் டிரியூ கப்பலை பாதுகாப்பு அமைச்சக செயலாளர் டாக்டர் அஜய்குமார் முறைப்படி வரவேற்றார்.

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இந்திய கப்பல் கட்டும் தளங்களில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 41 ஆயிரம் டன் எடை கொண்ட இக்கப்பலின் நீளம் 689 அடியாகவும், அகலம் 106 அடியாகவும், ஆழம் 30 அடியாகவும் உள்ளது.இக்கப்பலில் சுமார் 1,700 டன் குளிரூட்டப்பட்ட சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தோராயமாக இரண்டு வாரங்கள் பழுது பார்க்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

நிகழ்ச்சியின் போது பாதுகாப்பு அமைச்சர்கள் செயலாளர் டாக்டர் அஜய்குமார் பேசியது, இந்தியாவில் ஆறு பெரிய கப்பல் கட்டும் தளங்கள் இயங்கி வருகின்றன இதன் மூலம் ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் மொத்த வருவாய் ஈட்டப்படுகிறது. இக்கப்பல் தலங்களில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை மற்றும் வணிக கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று இந்தியாவில் பழுது மற்றும் பராமரிப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது இந்திய அமெரிக்க வரலாற்றில் ஒரு புதிய மைல் கல் ஆகும். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி ப தற்போதைய நிகழ்வு நடைபெற்றுள்ளது. புதிய கப்பல்களை வடிவமைத்து இந்தியாவிலேயே கட்டமைக்கப்படும் திறன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே கட்டப்பட்ட விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது .

கடந்த நிதியாண்டில் சுமார் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியும் குறிப்பிடத் தகுந்த அளவில் உள்ளது. இந்தியா, அமெரிக்கா இடையே பரஸ்பர உறவு, நம்பகத்தன்மை, வெளிப்படை தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய வளர்ச்சி இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய தேவையை அதிகரித்து வருகிறது என்றார் அஜய்குமார்.

இந்நிகழ்ச்சியில் கடற்படை துணை தளபதி எஸ் .என். ஹோர் மேட் , தமிழ்நாடு புதுச்சேரி கடற்படை அதிகாரி எஸ். வெங்கட்ராமன், அமெரிக்க துணை தூதர் ஜூடித் ராவின், அமெரிக்க கடற்படை அதிகாரி மைக்கேல் பேகர், எல் அன் டி கப்பல் கட்டும் தளத்திற்கான பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர் ஜே.என். பாட்டீல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் கொண்டனர்.


Updated On: 7 Aug 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  2. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  7. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  8. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  9. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  10. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!