/* */

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை ஆர்டிஓ விசாரணை: சந்தேகம் உள்ளதாக உறவினர் புகார்

இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்

HIGHLIGHTS

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை ஆர்டிஓ விசாரணை:  சந்தேகம் உள்ளதாக உறவினர் புகார்
X

இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்.டி.ஓ. விசாரணையில் பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் புகார்தெரிவித்தனர்.

வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் கொள்ளாபுரி நகரைச் சேர்ந்தவர். வடிவேலு ( 32) இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சேர்ந்த செல்வி ( 27) என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் ஆகி இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 1.1/2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடப்பதாக கூறப்படுகிறது .இதனால் மனமுடைந்த செல்வி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டுக்கொண்டார். இதைப் பார்த்த வடிவேலு மனைவி செல்வி மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் , செல்வி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவலை செல்வியின் சகோதரர்களுக்கு வடிவேல் தெரிவித்தார். செல்வியின் சகோதரர்கள் சகோதரி செல்வியின் சாவில் மர்மம் இருப்பதாக வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமணமாகி 4 வருடங்கள் ஆனதால் ஆர். டி. ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கொலையா தற்கொலையா என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்



Updated On: 27 March 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...