/* */

வடசென்னையில் கடல் சீற்றம்: படகுகளை அப்புறப்படுத்திய மீனவர்கள்

வடசென்னைக்கு உட்பட்ட காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது

HIGHLIGHTS

வடசென்னையில் கடல் சீற்றம்: படகுகளை அப்புறப்படுத்திய மீனவர்கள்
X

 வடசென்னைக்கு உட்பட்ட காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக வெள்ளிக்கிழமை வடசென்னைக்கு உட்பட்ட காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் வியாழக்கிழமை இரவு முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதன் காரணமாக

11.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், 12. -ஆம்தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பாதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,13. ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை , இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், 14. ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமட்டத்துடன் காணப்படும். நகரில் பொதுவாக இடிமின்னதுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்; ஒருசில பாதிகளில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன மதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் கிழக்கு இலங்கை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவடைந்த நிலை கொண்டுள்ள நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் தமிழகத்தின் வடக்கு, மத்திய தமிழக பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல படிப்படியாக நகர்ந்து வரும் திங்கள்கிழமை அரபிக் கடலைக் கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றவர்கள் கரைக்குத் திரும்பிவிட்டனர்.

காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் கடுமையான கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சுமார் இரண்டு மீட்டர் உயரத்திற்கு ராட்சத கடல் அலைகள் எழும்பி பார்ப்பவர்களை அச்சமூட்டச் செய்தது. கடலரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராட்சத அலைகளால் இத்தடுப்புச் சுவர்களில் மேலும் பாதிப்பு ஏற்பட்டால் எண்ணூர், திருவொற்றியூர் பகுதியில் கடலோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரச் செய்யும் பணிகளில் மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடலரிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள், கட்டுமரக் கலன்கள் உள்ளன. புயலின் தாக்கத்தால் கடல் அலை தடுப்புச்சுவரையும் தாண்டி வீசியதால் அச்சமடைந்த மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கிரேன்கள் மூலம் கரைப்பகுதிக்கு கொண்டு வந்து பத்திரப்படுத்தினர். விசைப்படகுகளை இடைவெளியின்றி ஒன்றோடொன்று அணைத்து வைத்து கயிறுகளால் கட்டி வைத்தனர். எண்ணூர் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், ராமகிருஷ்ணாநகர், நல்லதண்ணீர் ஓடைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பைபர் மற்றும் மரக்கலன்களை கிரேன்கள் மூலம் அகற்றி பாதுகாப்பான இடங்களில் வைத்தனர். கடல் கொந்தளிப்பு காரணமாக வடசென்னை பகுதியில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Updated On: 11 Nov 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை