/* */

வடசென்னையில் சீற்றத்துடன் காணப்பட்ட வங்கக் கடல்: அச்சத்தில் மீனவர்கள்

கடல் சீற்றமுடன் காணப்பட்டதையடுத்து தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களில் காசிமேடு மீனவர்கள் வைத்தனர்

HIGHLIGHTS

வடசென்னையில் சீற்றத்துடன் காணப்பட்ட வங்கக் கடல்: அச்சத்தில் மீனவர்கள்
X

மாண்டஸ் புயலால் கடல் சீற்றமுடன் காணப்பட்டதையடுத்து தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்ட காசிமேடு மீனவர்கள்.

திருவொற்றியூர் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக வியாழக்கிழமை வடசென்னைக்கு உட்பட்ட காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததோடு தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதி முழுவதும் வியாழக்கிழமை சீற்றத்துடன் காணப்பட்டது.

குறிப்பாக காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் கடுமையான கடல் அலைகள் வீசின. சுமார் இரண்டு மீட்டர் உயரத்திற்கு ராட்சத கடல் அலைகள் எழும்பி பார்ப்பவர்களை அச்சமூட்டச் செய்தது. கடலரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர்கள் ராட்சத அலைகளால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் ஆங்காங்கு தடுப்புச் சுவர்ககள் சரிந்து கடலில் மூழ்கி வருகின்றன. இவ்வாறு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டால் எண்ணூர், திருவொற்றியூர் பகுதியில் கடலோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரச் செய்யும் பணிகளில் மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடலரிப்பு ஏற்படும் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள், கட்டுமரக் கலன்கள் உள்ளன. புயலின் தாக்கத்தால் கடல் அலை தடுப்புச்சுவரையும் தாண்டி வீசியதால் அச்சமடைந்த மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கிரேன்கள் மூலம் கரைப்பகுதிக்கு கொண்டு வந்து பத்திரப்படுத்தினர்.

விசைப்படகுகளை இடைவெளியின்றி ஒன்றோடொன்று அணைத்து வைத்து கயிறுகளால் கட்டி வைத்தனர். எண்ணூர் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், ராமகிருஷ்ணாநகர், நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பைபர் மற்றும் மரக்கலன்களை கிரேன்கள் மூலம் அகற்றி பாதுகாப்பான இடங்களில் வைத்தனர். கடல் கொந்தளிப்பு காரணமாக வடசென்னை பகுதியில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாண்டஸ் புயல் நகரும் வேகம் அதிகரித்துள்ளது எனவும் சென்னையில் இருந்து 580 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து 460 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை இரவு புயல் கரையை கடக்கும் எனவும் புயல் கரையை நெருங்கும்போது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

சென்னைக்கு 580 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 8 Dec 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்