/* */

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர். மூளையாக செயல்பட்ட வழக்கறிஞருக்கு போலீஸார் வலை

HIGHLIGHTS

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
X

கொலைமுயற்சியில் கைதான சஞ்சீவ் குமார் மற்றும் பிரதீப் குமார்

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் 38. இவருக்கு திருமணமாகி சுடர்மதி என்கின்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தினேஷ்குமார் திருவொற்றியூர் பகுதியில் உள்ள ஒரு ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார்

நேற்று இரவு 10 மணியளவில் வழக்கம் போல பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார் அப்போது புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் தினேஷ்குமாரை மடக்கி தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெட்டினர். இதில் தினேஷ் குமாருக்கு இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது

அப்போது எதிர் திசையில் ரோந்து பணியில் வந்துகொண்டிருந்த பேசின்பிரிட்ஜ் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி ஓடினார். இதனைப் பார்த்த அந்த 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திக்கொண்டு ஓடிய ஆய்வாளர் பேசின் பிரிட்ஜ் ரயில்வே ஸ்டேஷன் அருகே இரண்டு பேரை மடக்கி பிடித்தார்.

அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர்கள் அயனாவரம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ்குமார் 25 மற்றும் அயனாவரம் ரயில்வே கோட்ரஸ் பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் 28 என்பது தெரியவந்தது மேலும் தப்பி ஓடிய நபர் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் 23. என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன.

இதில் சஞ்சீவ் குமார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரை வழக்கறிஞர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஜாமீனில் எடுத்துள்ளார். இவர்களிடம் ராஜேஷ் எனக்குத் தெரிந்த பெண் ஒருவரை திருவொற்றியூரில் வேலை செய்யும் நபர் ஒருவர் தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார். அவரை கொலை செய்ய வேண்டும் என்று கூறி சஞ்சீவ்குமாரை ஜாமினில் எடுத்துள்ளார். தப்பி ஓடிய அஸ்வின் மற்றும் போலீசில் சிக்கிய சஞ்சீவ்குமார் ஆகிய இருவருக்கும் ராஜேஷ் வழக்கறிஞராக செயல்பட்டு வந்துள்ளார்.

சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரும் தினேஷ்குமாரை கொலை செய்வதற்கு ஒத்துக்கொண்டு நேற்று இரவு திருவொற்றியூர் பகுதியிலிருந்து தினேஷ்குமாரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். பிறகு இவர்கள் தினேஷ்குமார் வெட்டியது பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் இருந்த தினேஷ் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தனது மனைவி சுடர்மதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டதாகவும், ராஜேஷ் என்ற வழக்கறிஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததை தான் தட்டிக் கேட்டதால் அவர் என்னை விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து தப்பி ஓடிய அஸ்வின் மற்றும் வழக்கறிஞர் ராஜேஷ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த பேசின் பிரிட்ஜ் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 13 Jan 2022 10:21 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?