/* */

ஒருநாள் சம்பளத்தை கொரோனா தடுப்பு பணிக்கு கொடுக்கும் ஆசிரியர்கள்..!

கொரோனா தடுப்பு பணிக்கு ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய -ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள்.

HIGHLIGHTS

ஒருநாள் சம்பளத்தை கொரோனா தடுப்பு பணிக்கு கொடுக்கும்  ஆசிரியர்கள்..!
X

சென்னை: தமிழக அரசின் கொரோனா நிவாரணப் பணிக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஜூன் மாத ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளமாறு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் சா. அருணன் வெளியிட்ட அறிக்கை, தமிழ்நாட்டில் கொரோனா கொடுந்தொற்று கட்டுக்குள் கொண்டு வர இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்துவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நன்றி உணர்வோடு பாராட்டுகிறது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு.

கொரோனா கொடுந்தொற்று தடுப்புப் பணி, உபகரணங்கள் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய கேட்டுக்கொண்டோம். அதனையேற்று மே மாதம் ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

மேலும், தொடர்ந்து கொரோனா பணிக்கு நிதி தேவைப்படுவதை அறிகிறோம். ஆதலால் முன்கள பணியாளர்களை தவிர்த்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஜூன் மாதம் ஊதியத்தில் இருந்தும் ஒருநாள் ஊதியத்தை பிடித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Jun 2021 8:03 AM GMT

Related News