/* */

தமிழக கோயில்களிலிருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும்:சு.சாமி முதல்வருக்கு கடிதம்

tamilnadu temple matter.s.samy letter to cm தமிழகத்தில் உள்ள கோயில்களின் பொறுப்புகளில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

HIGHLIGHTS

தமிழக கோயில்களிலிருந்து  அறநிலையத்துறை வெளியேற வேண்டும்:சு.சாமி முதல்வருக்கு கடிதம்
X

முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி (கோப்பு படம்)

tamilnadu temple matter.s.samy letter to cm

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே பலவிதமான சர்ச்சைகள் நிலவி வருகிறது. அதுவும் இந்து மதத்திற்கு எதிரான செயல்பாடுகளை செய்துவருவதாக ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுவது தொடர்கதையாகி வருகிறது. இதோடு சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களிடம் விசாரணை , அவர்கள் வசம் உள்ள கோயில்நிர்வாகத்தினை மீட்டெடுக்கும் நடவடிக்கை போன்ற நிகழ்வுகளால் அடிக்கடி சர்ச்சை நிலவுகிறது.

இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இதுகுறித்து பல கூட்டங்களில் திமுகவின் செயல்பாடு எப்போதும் இந்து மதத்திற்கு எதிரானது அல்ல என பேசினாலும் செயல்பாடுகளில் இந்து மதத்தினைச் சார்ந்த பலருக்கும் இவ்விஷயத்தில் திருப்தியளிக்கவில்லை.

இவ்விஷயத்தில் தமிழக பாஜ நிலையான எதிர்ப்பினை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி இதுகுறித்து ஒரு கடிதத்தினை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள கோயில்களை பொறுப்பேற்பதிலிருந்து தமிழக அரசின் அறநிலையத்துறையானது வெளியேறவேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடித்தில் அவர்குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழகத்தில் உள்ள இந்து கோயில்கள் மற்றும் மத நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த தொண்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதில் இருந்து தமிழக அரசானது முழுமையாக விலகிட வேண்டும்.இதுபோன்ற செயலானது இந்திய அரசியலமைப்பு சட்டங்களான 25 மற்றும் 26 வது பிரிவிற்கு எதிரான செயலாகும்.

சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கில் கடந்த 2014 ம் ஆண்டு ஜனவரி 6ந்தேதி டில்லி சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் படி சிதம்பரம் கோயில் பொதுதீட்சிதர்கள் ''சீர்மரபினர்'' என்பதை சென்னை ஐகோர்ட்டானது 1951ம் ஆண்டிலேயே உறுதிசெய்துள்ளது. இதனை மீண்டும் பரிசீலிக்க வேண்டிய அவசியமே தேவையில்லை.

பல நுாறாண்டுகளாக சிதம்பரம் கோயில் நிர்வாகத்தினை பொதுதீட்சிதர்கள்தான் திறம்பட மேற்கொண்டு வருகின்றனர். இது நாள் வரை எந்த பிரச்னைகளுமே இருந்ததில்லை. இதற்கு அவர்கள்தான் முழுஉரிமையும் படைத்தவர்கள் ஆவார்கள்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி இரண்டாவதாக எந்த ஒரு கோயில் நிர்வாகத்தினையும் அந்த நிர்வாகத்தில் ஏதேனும் சீர்கேடு இருந்தால்மட்டுமே அறநிலையத்துறையானது தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். ஆனாலும் அந்த நிர்வாகத் தவறுகளைச் சீர் செய்து விட்டு மீண்டும் கோவில் நிர்வாகத்தினை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அறநிலையத்துறையானது நிரந்தரமாக தொடர்ந்து தன்கட்டுப்பாட்டுக்குள் மேற்கொள் ளமுடியாது.

அறநிலையத்துறைச் சட்டப்பிரிவு 45 ன்படி ஒரு செயல்அலுவரை நியமனம் செய்து, நியமன விதிகள் இயற்றப்படாமல் இருந்தால் அந்த நியமனமானது செல்லாது.

tamilnadu temple matter.s.samy letter to cm


அழகிய தெப்பக்குளத்துடன் காட்சயளிக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகம் (கோப்பு படம்)

tamilnadu temple matter.s.samy letter to cm

சுப்ரீம் கோர்ட்டானது வைத்தீஸ்வரன் கோயில் வழக்கில் கடந்த 1965 ம் ஆண்டு ஒரு தீர்ப்பினை அளித்துள்ளது. அந்த தீர்ப்பில் துணைக் கமிஷனரோ , கமிஷனரோ, கோர்ட்டோ தகுந்த காரணத்தினை நி்ரூபி்க்காமல் ஒரு செயல் அலுவலரை நியமனம் செய்ய முடியாது. அப்படியே செயல்அலுவலரை நியமனம் செய்தால் சிறிது காலத்திற்கு மட்டுந்தான் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் 2014 ல் சுப்ரீம்கோர்ட்டானது சிதம்பரம் கோயில் வழக்கில் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

tamilnadu temple matter.s.samy letter to cm


தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்ய வந்த போது எடுத்த படம் (கோப்பு படம்)

tamilnadu temple matter.s.samy letter to cm

இந்தியாவில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவினை மதித்து பின்பற்ற வேண்டும் என அரசியல் சாசனத்தில் 141 வது பிரிவில் சொல்லப்பட்டுள்ளது. அந்த உத்தரவுகளை அரசும், கீழமை கோர்ட்டுகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டியம் என்பதுதான் விதி.

அரசியல் சாசன விதிகள் 25, 26 ன்படியும் சிதம்பரம் கோயில் தொடர்பான என் வழக்கின் தீர்ப்பின் படியும் , தமிழக அரசானது கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாத பட்சத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அவமதித்ததாகும் எனவும் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய ஸ்வாமி தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Dec 2022 8:12 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  2. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  3. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  6. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  7. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  8. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  10. கோவை மாநகர்
    மதவாத அரசியலை செய்து வருவதே இண்டி கூட்டணி கட்சிகள்தான் : வானதி...