/* */

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறப்பு

tamilnadu schools reopen on tomorrow தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து அரசுமற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் செயல்படத் துவங்குகின்றன.

HIGHLIGHTS

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து  நாளை பள்ளிகள் மீண்டும் திறப்பு
X

tamilnadu schools reopen on tomorrow



தமிழகத்தில் காலாண்டு விடுமுறை இன்றோடு முடிவடைவதால்நாளை முதல் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட துவங்க உள்ளதால் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் காலாண்டு தேர்வு நடந்தது. அக்டோபர் 1 ந்தேதி முதல் காலாண்டுதேர்வுக்கான விடுமுறை துவங்கியது. இந்த விடுமுறையானது இன்றோடு முடிவடைவதால் பள்ளிகள் அனைத்தும் நாளை முதல் வழக்கம்போல் செயல்பட உள்ளது.நாளை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான வகுப்புகள் வரை நாளை மீண்டும் துவக்கப்பட உள்ளது.
துவக்கப்பள்ளிகள் 13 ந்தேதி

துவக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 13ந்தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளதால் விடுமுறை அவர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதேபோல் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு முடிந்து மீண்டும்நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.விடுமுறை முடிந்த பள்ளிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்புக், பேனா, பென்சில் , விற்பனை செய்யும் ஸ்டேஷனரி கடைகளில் இப்போதிருந்தே வியாபாரமானது சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதால் நாளை காலை மழை பெய்ய வாய்ப்புள்ளது. விடுமுறை நாட்களில் மழையே இல்லை ஆனால் பள்ளி திறக்கும் நாளில் மழை வருமா? என மாணவ, மாணவிகள் ஆச்சர்யத்துடன் கேள்வி கேட்கின்றனர். எது எப்படியோ நாளை முதல் வீட்டில் அடைபட்டிருந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லவிருப்பதால் குதுாகலத்தில் உள்ளனர்.

tamilnadu schools reopen on tomorrow

மேலும் விடுமுறைக் காலத்தில் நவராத்திரி கொலு, சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜைகள் வந்ததால் பல மாணவர்கள் தங்களுடைய ரெகுலர் வீட்டுப்பாடங்களை செய்யாமல் நேற்று இறுதி நேரத்தில் உட்கார்ந்து செய்வதை பார்க்க முடிந்தது. இது மட்டும் அல்லாமல் மாணவர்களின் நேரத்தினை விழுங்கும் ஒரே ஆயுதம் என்ன தெரியுமா? ஸ்மார்ட் போன் ஒன்றே . அது அவர்கள் கையில் இருந்தால் போதும் சாப்பாடு, உறக்கம் எதுவும் அவர்களுக்கு தேவையில்லை.

பெற்றோர்கள் கண்காணிப்பு

தொழில்நுட்ப வளர்ச்சியில் கண்டுபிடிக்கப்படும் எந்தவொரு சாதனங்களிலும் சாதக, பாதகங்கள் உண்டு. அதேபோல் ஸ்மார்ட் போனிலும் உண்டு. உலக விஷயங்களை உங்கள் கையிலேயே காணலாம். பல பயனுள்ள தகவல்கள் பல ஆஃப்கள் மூலம் ஸ்மார்ட் போனில் கிடைக்கின்றன. ஆனால் இடையிடையே வரும் விளம்பரங்கள், செய்திகள், செய்தி துணுக்குகள், படங்கள், போன்றவைகளினால் நம் மனது பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். என்னதான் தடை போட்டாலும் இதனை அரசாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. எனவே பெற்றோர்கள் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் அ திக நேரம் ஸ்மார்ட்போனில் செலவிட அனுமதிக்காதீர்கள். தேவைக்கு மட்டுமே அவர்கள் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும்போது பெற்றோர்கள் அதனை அருகில் இருந்து கண்காணிப்பது மிக மிக அவசியம் ஆகும்.கண்காணிக்காமல் விட்டாமல் நடக்கும் விபரீதத்துக்கு நாமே பொறுப்பு என்ற நிலைக்கு வந்துவிட வேண்டும்... கண்காணியுங்கள்...பெற்றோர்களே....

Updated On: 9 Oct 2022 5:05 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்