/* */

ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம் கருவிழிப் பதிவு கட்டாயம் :அரசுஉத்தரவு?

Ration Shop in Tamil- தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

HIGHLIGHTS

ரேஷன் கடைகளில்  அதிரடி மாற்றம்   கருவிழிப் பதிவு கட்டாயம் :அரசுஉத்தரவு?
X

ரேஷன் கடையில் கைவில் பதிவைக் கொண்டு பொருட்களை வழங்கும் பணியாளர் (கோப்பு படம்)

Ration Shop in Tamil-தமிழக ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்த உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு நல்ல முறையில் தற்போது அரசு சார்பில் பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இருந்தபோதிலும் முன்பு அட்டையை வைத்து வழங்கப்பட்ட பொருட்களான அரிசி, சர்க்கரை, பாமாயில்,பருப்பு உள்ளிட்டவைகள் அனைத்துமே தற்போது ஸ்மார்ட் கார்டு மூலம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களை பலமாநிலங்கள் பின்பற்றி வருவது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

கருவிழிப்பதிவு

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் முறையில் பல்வேறு மாற்றங்களை கடந்த 6 மாத காலமாக அரசானது அறிவித்து வருகிறது. 12 புதிய இடங்களில் அரிசி ஆலைகள் அமைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை விரல்பதிவு முறையானது பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இனி எதிர்காலத்தில் கருவிழி ரேகைகளை பதிவு செய்யும் முறை அமலுக்கு வரும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் சமீபத்தில் சென்னையில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்தார். அருகில் அமைச்சர் சக்ரபாணி உள்ளிட்ட அதிகாரிகள். (கோப்பு படம்)

கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. இப்புதிய திட்டத்தின் படி பொருட்கள் வாங்க வருவோர் தங்கள் கண்களைக் காட்டவேண்டும். லேசர் கருவிகள் இதனை பதிவு செய்யும். இதனால் பொருட்கள் ரேஷன் கடைகளில் திருடப்படுவது தடுக்கப்படும். அரியலுார் மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

முறைகேடு குறையும்?

தமிழகத்திலுள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் மக்களுக்காக வழங்கப்படும் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படாமல் பிளாக்கில் விற்பனை செய்வதாக பல புகார்கள் வந்துகொண்டேயிருக்கிறது. இதுபோன்ற முறைகேடு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அரசு கருவிழிப்பதிவு திட்டத்தினை அமல்படுத்தினால் இதுபோன்ற முறைகேடு சம்பவங்கள் குறைய வாய்ப்பிருக்கும்.. பெரும்பலான திருட்டுபொருட்கள் அனைத்தும் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவே புகார்கள் அதிக அளவில் வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் இடைத்தரகர்கள் காணாமல் போய்விடுவது உறுதி.


நுகர்வோரின் ஸ்மார்ட் கார்டு பாயின்ட் ஆப் ஸ்கேல் மெஷின் மூலம் பதிவிடப்படுகிறது. (கோப்பு படம்)

வெளிமாநிலங்களில் அதிக விலை?

தமிழக ரேஷன் கடைகளில் இருந்து கடத்தப்படும் பொருட்கள் அனைத்தும் ஆந்திரா, கேரள மாநிலங்களுக்கு கடத்தப்படுவதோடு அங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் அரசுக்கு புகார் வந்துள்ளது. அரசு தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரிசி பற்றாக்குறை என புகார் வரும் பட்சத்தில் அதனைக் கண்காணிக்க 24 மணி நேரத்தில் பறக்கும் படை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் அரிசியானது திருடப்பட்டுள்ளதா எனமண்டல அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

க்யூஆர்கோடு

தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவதைத் தடுக்க க்யூ ஆர்கோடு முறை அ

றிமுகப்படுத்தப்பட அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி ரேஷன் கடைகளில் இறக்கப்படும் சர்க்கரை,அரிசி, பருப்பு மூட்டைகளில் தமிழக அரசின் முத்திரையானது பொறிக்கப்பட்டிருக்கும். அதன் மேல் கியூ ஆர்கோடு இருக்கும். இந்த க்யூ ஆர் கோடு உள்ள மூட்டைகளை யாரும் வாங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி அடுத்தபடம் நுகர்வோருக்கு எடையிட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது.(கோப்பு படம்)

துாய்மைக்குமுதலிடம்

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்துமே துாய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான எஸ்ஓபி அனைத்து கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளை அங்குள்ள பணியாளர்கள் தினந்தோறும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கடைகள் மற்றும் வளாகப்பகுதியில் குப்பைகள் இருக்க கூடாது. பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளும் படு சுத்தமாக இருக்க வேண்டும். தரையில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட எந்த பொருளும் சிதறி கிடக்ககூடாது. அப்படி சிதறிக்கிடக்கும் பொருட்களை பெருக்கி அதனை மக்களுக்கு வழங்கக்கூடாது எனவும் சுத்தத்தினை நல்லமுறையில் பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 April 2024 5:46 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்