/* */

காலாவதியான மருந்துகளைக் கண்டறிய தமிழக மாவட்டந்தோறும் விரைவில் குழு :அமைச்சர் தகவல்

tamilnadu expiry medicine inspection teamதமிழகத்தில் மாவட்டந்தோறும் காலாவதியான மருந்துகளைக் கண்டறிய விரைவில் குழு அமைக்கப்படும் என மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

காலாவதியான மருந்துகளைக் கண்டறிய தமிழக மாவட்டந்தோறும் விரைவில் குழு :அமைச்சர் தகவல்
X

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (கோப்பு படம்)

tamilnadu expiry medicine inspection team

தமிழகத்தில் காலாவதியான மருந்துகள் விற்கப்படுகின்றனவா? என ஆராய விரைவில் மாவட்டந்தோறும் குழு அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவி்த்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரம் அடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்குகிறது. பெரும்பான்மையான மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான முன்னெச்செரிக்கை கூட்டம் மாவட்டந்தோறும் மற்றும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் அனைத்து துறை அமைச்சர்கள் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்திலுள்ள பொதுசுகாதார ஆய்வகத்தில் எலிக்காய்ச்சல் நோயை பரிசோதிக்கும் லெப்டோஸ்பிரோசிஸ் லேப்பை மக்கள் நல்வாழ்வுத்துளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

tamilnadu expiry medicine inspection team


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய ஆய்வகத்தினை திறந்து வைத்தார்.(கோப்புபடம்)

tamilnadu expiry medicine inspection team

பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசும்போது,

தமிழகத்தில் எலிக்காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் தேசிய நோய் தடுப்பு நிறுவனத்தின் வாயிலாக மத்திய அரசானது ஆய்வகம் அமைக்க அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது.மேலும் இந்த எலிக்காய்ச்சல் நோயானது சுழல்வடிவ நுண்ணுயிரியான லெப்டோஸ்பைரா என்ற கிருமியால் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்நோய் பாதிக்கும் பட்சத்தில் இதனால் சிறுநீரகம், நுரையீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. நாய்கள், பன்றிகள், கால்நடைகள், மற்றும் எலிகளின் வாயிலாக மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது.மேலும் தமிழகத்தினைப்பொறுத்தவரை டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 377 பேர் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் விரைவில் காலாவதியான மருந்துகளைக் கண்டறிய கமிட்டி அமைக்கப்படும். இதற்கான கண்காணிப்பு பணியானது தற்போது மாநிலம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மழைக்கான முன்னெச்செரிக்கை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளதால் சென்னை வானிலை ஆய்வுமையமானது இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கையினை விடுத்திருந்தது. இதன் படி பெரும்பாலான மாவட்டங்களில் நள்ளிரவு முதலே மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்ததால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அம்மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டது.

மேலும் இம்மழை குறித்து ஏற்கனவே முன்னதாகவே முன்னெச்செரிக்கைநடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டங்கள் அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டதால் அதிகாரிகளும் ஏரி,குளம், குட்டை , கால்வாய் உள்ளிட்டவைகளின் கரைகள் சேதமடையாதவாறு கண்காணிப்பு பணியினை முன்னதாக மேற்கொண்டனர். இருப்பினும் பல இடங்களில் தொடர் மழை பெய்ததால் இப்பணிகளும் பாதிப்படைந்தது. இருந்த போதிலும் தமிழகம் முழுவதும் வரும் 16ந்தேதி முதல் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானால் தொடர் மழை பெய்ய வாய்ப்பு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மாநில சுகாதாரத்துறை சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்டந்தோறும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Nov 2022 7:59 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  2. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  4. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  5. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  7. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  8. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!