/* */

வரத்து குறைவால் தமிழகத்தில் செஞ்சுரி அடித்த சின்னவெங்காயம்:விலைகுறையுமா? .......

small onion rate hike due to deficit தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர் மழை பெய்தது. இதனால் வெங்காய சாகுபடி பாதிப்படைந்து சின்னவெங்காயத்தின் வரத்துகுறைந்தது.

HIGHLIGHTS

வரத்து குறைவால்  தமிழகத்தில் செஞ்சுரி அடித்த  சின்னவெங்காயம்:விலைகுறையுமா? .......
X

தமிழகத்தில் கிலோ ரூ.1௦௦ க்கு விற்கப்படும் சின்ன வெங்காயம்.


small onion rate hike due to deficit

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளுத்து வாங்கியதால் விவசாயமும் பாதிப்படைந்தது. பல மாவட்டங்களில் பயிர்கள் தண்ணீ்ரில் மூழ்கியது. இதன் எதிரொலியாக சின்னவெங்காயம் வரத்தானது குறைந்து போனதால் இதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 ஐத் தொட்டுள்ளது.

தமிழகத்தினைப் பொறுத்தவரை அனைத்து வீடுகள், ஹோட்டல்களில் சாம்பாருக்கு இந்த சின்ன வெங்காயத்தினைத்தான் பெரும்பாலும் உபயோகப்படுத்துவது வழக்கம்.காலை டிபனுக்குண்டான சாம்பாருக்கு இந்த வெங்காயம்தான். இவ்வளவு உபயோகமுள்ள சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு அரை கிலோ மட்டும் வாங்கி செல்லலாம் என வாங்கி செல்கின்றனர்.சேலம் நகரில் சின்னக்கடைவீதி, ஆனந்தா மேம்பாலப்பகுதி, செவ்வாய்ப்பேட்டை பால்மார்க்கெட், மற்றும் நகரின் உழவர்சந்தைகள் உள்ளிட்டபகுதிகளுக்கு தினந்தோறும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் லோடு வருவது வழக்கம்.

small onion rate hike due to deficit


small onion rate hike due to deficit

சேலம் மாநகரைப்பொறுத்தவரை செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் மொத்த விற்பனையாளர்கள் கடையில் கூட்டம் அதிகரித்துக்காணப்படும் . காரணம் வியாபாரிகள் அன்றுதான் பர்ச்சேஸ் செய்ய வருவர். இதனால் அன்று மட்டும் வெங்காயமூட்டைகளின் வரத்து அதிகம் காணப்படும். மற்ற சாதாரண நாட்களில் குறைந்த அளவிலான லோடுதான் வரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது இரண்டுநாட்களிலுமே சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து போனது.காரணம் மழை பெய்ததால் பல இடங்களில் சின்னவெங்காய சாகுபடியானது பெரும் பாதிப்பினைச் சந்தித்துள்ளது.

தமிழகத்தின் மற்றமாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழைய வெங்காயமானது கிலோ ரூ. 90 முதல் ரூ. 100 வரை தரத்தைப்பொறுத்து விலை நிர்ணயம் செய்து சில்லரை விற்பனைக்கடைகளில் விற்கின்றனர். ஒரு சில இடங்களில் கிலோ ரூ. 110 க்கும் விற்கப்படுகிறது. புதிய வெங்காயத்தினைப் பொறுத்தவரை மொத்த விற்பனையில் ரூ. 30 முதல் ரூ. 50வரை விற்கப்படுகிறது. இதுவே சில்லரை விற்பனைக்கடைகளில் கிலோஒன்றுக்கு ரூ. 60 முதல் ரூ. 70 வரை விற்கப்படுகிறது.

small onion rate hike due to deficit


small onion rate hike due to deficit

பழைய வெங்காயமானது 3 மாதத்திற்கு முன் நல்ல முறையில் இருப்பு வைத்து பின்னர் கொண்டு வரப்படுவதால் இந்த விலை. அதுவே புதிய வெங்காயம் வாங்கினால் எடை அதிகமாக இருக்கும். சற்று ஈரப்பதத்துடன் காணப்படும். பொதுமக்கள் பழைய வெங்காயத்தினை வாங்கி ஸ்டாக் வைக்கலாம்.அதுவே புதிய வெங்காயத்தினை அதிக நாட்கள் ஸ்டாக் வைக்க முடியாது. அழுகிவிடும்.

small onion rate hike due to deficit


small onion rate hike due to deficit

இதுகுறித்து வியாபாரிகள்கூறும்போது,

சின்ன வெங்காயமானது கடந்த 10 நாட்களாகவே உச்சபட்ச விலையான ரூ. 100 க்கு குறையவில்லை. மழை பெய்ததால் அதன் வரத்துகுறைந்து போனதால் விலை அதிகரித்து காணப்படுகிறது. மழை குறைந்து வரத்து அதிகரிக்கும்போது இதன் விலையும் நார்மல் விலைக்கு வர வாய்ப்புள்ளது.

சின்ன வெங்காயத்தின் விலை செஞ்சுரி அடித்ததால் பொதுமக்கள் பலர் தற்போது பெரிய வெங்காயத்தினை வாங்கி செல்கின்றனர். இதன் விலை தற்போது வரத்து அதிகமானதால்ரூ. 30 முதல் ரூ. 40 வரை கிலோ ஒன்றுக்கு விற்கப்படுகிறது. தரத்தினைப்பொறுத்து விலை மாறுபடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 22 Nov 2022 6:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...