/* */

rain will continue up to 3 rd july தமிழகம், புதுவையில் ஜூலை 3 வரை மழை நீடிக்க வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்

rain will continue up to 3 rd july தமிழகத்தில் ஜூலை 3 ந்தேதி வரை மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

rain will continue up to 3 rd july  தமிழகம், புதுவையில் ஜூலை 3 வரை  மழை நீடிக்க வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம்
X

rain will continue up to 3 rd july

தமிழகம் , புதுவை கடலோர பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் ஜூலை 3 ந்தேதி வரை மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தும் அறிவித்துள்ளது.தமிழகம், புதுவை , காரைக் கால் உள்ளிட்டபகுதிகளில் ஒரு சில இடங்களில் ஜூலை மாதம் 3 ந்தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது வானிலை ஆய்வு மையமானது அறிவித்துள்ளது.

மேலும் 3 ந்தேதியன்று தமிழகத்திலுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர் , தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.சென்னையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மாவட்டங்களை ஒட்டிய கடலோர பகுதிகள் குமரிக்கடல் பகுதிகளில் 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும்.இப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் .

rain will continue up to 3 rd july


rain will continue up to 3 rd july

தமிழகத்தில் நேற்று பொறுத்தவரை 9 இடங்களில் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் 27 அணைகள் வறண்டு காணப்படுகிறது. நீர்வளத்துறை சார்பில் 90 அணைகள் பராமரிக்கப்படுகிறது.தென்மேற்கு பருவமழையால் வருடந்தோறும் தமிழகத்திலுள்ள பல அணைகளுக்கு போதிய நீராதாரம் கிடைத்து வந்தது.

ஆனால் இந்த ஆண்டினைப் பொறுத்தவரை நடப்பு மாதத்தில் தென்மேற்கு பருவமழையானது போதிய அளவில் தீவிரம் அடையாமல் உள்ளதால் பல அணைகள் வறண்டு காணப்படுகின்றன. மேலும் அண்டை மாநிலங்களான கர்நாடகா,கேரளாவிலும் போதிய மழை இல்லை. பருவழை பொய்த்து போனதால் 27 அணைகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. வருண பகவான் கருணை காட்டினால் மட்டுமே விவசாய தொழில்கள் மும்முரமாக இப்பகுதிகளில் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Updated On: 30 Jun 2023 8:14 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...