/* */

பெரம்பூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது
X

ரயிலில் குட்கா கடத்தியதாக பெரம்பூர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள்.

சென்னைக்கு பெங்களூருவில் இருந்து பெரம்பூர் வரும் ரயிலில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு வட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுவதாக செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது

தகவலின்பேரில் இன்று காலை 8 மணி அளவில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் ரயில்வே நிறுத்தத்தில் நின்றது.

இதிலிருந்து பயணிகள் இறங்கி செல்லத் தொடங்கினர். அப்போது செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐய்யப்பன் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உள்ளிட்ட போலீசார் சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது இரண்டு கைப் பையுடன் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை மடக்கி சோதனை செய்தபோது அவர்களிடம் கைப்பையில் குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் கொளத்தூர் அஞ்சுகம் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த தன்பாத்கிரி வயது 38 என்பதும்

மற்றொரு நபர் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் பகுதியைச் சேர்ந்த சக்தி சிங் வயது 50 என்பதும் இவர் 20 நாட்களுக்கு முன்பு தன்பாத்கிரி என்பவரது வீட்டிற்கு வந்து தங்கி இருவரும் வாரம் ஒருமுறை பெங்களூர் சென்று குட்கா பொருட்களை வாங்கி ரயில் மூலம் கொண்டு வந்து அதை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி கொளத்தூருக்கு கொண்டு சென்று அங்கிருந்து வட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கினால் அதிகப்படியான கெடுபிடி இருக்கும் என்பதினால் அதற்கு முந்தைய ரயில் நிறுத்தமான பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி இவர்கள் குட்கா பொருட்களை கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இவரிடமிருந்து 40 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 6:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  2. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  3. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  5. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  6. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  7. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  9. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...