வியாசர்பாடியில் பாஸ்ட் புட் கடையில் தகராறு: கத்திக்குத்து, 2 பேர் கைது

பாஸ்ட் புட் கடையில் சாப்பிடும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்தி குத்து விழுந்தது. இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வியாசர்பாடியில் பாஸ்ட் புட் கடையில் தகராறு: கத்திக்குத்து, 2 பேர் கைது
X

பைல் படம்

சென்னை வியாசர்பாடி பி வி காலனி 30வது தெருவைச் சேர்ந்தவர் விஜய் வயது 25 இவர் நேற்றிரவு வியாசர்பாடி எம் பி எம் தெரு பகுதியில் உள்ள பாஸ்ட்புட் கடையில் உணவு அருந்த சென்றார்.

இவருடன் இவரது நண்பர்களான பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 26 மற்றும் மணி என்கின்ற குள்ளமணி 28 என மூன்று பேர் சென்றுள்ளனர் மூவரும் குடித்துவிட்டு பாஸ்ட் புட் கடையில் அமர்ந்து சாப்பிட்டு உள்ளனர்.

சாப்பிட்டு முடித்தவுடன் யார் பணம் கொடுப்பது என்பதில் இவர்கள் 3 பேருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது பாஸ்ட் புட் கடையில் இருந்த கத்தியை எடுத்து கோபாலகிருஷ்ணன் மற்றும் குள்ளமணி ஆகிய இருவரும் விஜய்யை வெட்டியுள்ளனர். இதில் விஜய்க்கு இடது கை மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அங்கிருந்து அவர்கள் ஓடிவிட்டனர் சிறிது நேரத்தில் விஜய் அதே இடத்திலேயே மயக்கமடைந்தார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எம்கேபி நகர் போலீசார் விஜயை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெரம்பூர் பாரதி சாலை பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் வயது 26 வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மணியரசன் என்கின்ற குள்ளமணி 26 ஆகிய இருவரையும் கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து எம்கேபி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Nov 2021 6:30 AM GMT

Related News