/* */

பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது அனைத்தும் பொய் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்

கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் போனதால் மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை

HIGHLIGHTS

பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது அனைத்தும் பொய் என்பது  தேர்தல் முடிவில் தெரியவரும்
X

சென்னை பெுரம்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ

அண்ணாமலை கூறுவது அனைத்தும் பொய் என்பது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவில் தெரியவரும் என்றார் துரை.வைகோ.

திமுகவின் கோட்டையான சென்னையில் பாஜக ஓட்டை போடும் என்ற அண்ணாமலை கருத்திற்கு அண்ணாமலை எதிலும் பொய் எல்லாவற்றிலும் பொய், நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவில் தெரியவரும் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ சென்னை மாநகராட்சி வார்டு 35-ல் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சு.ஜீவனை ஆதரித்து கொடுங்கையூர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

மேலும் கொடுங்கையூரில் உள்ள பவானி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தேர்தல் பரப்புரைக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையில் 80 விழுக்காடு வெற்றி வாய்ப்பு உள்ளது. முதலமைச்சர் முன்மாதிரியாக பணியாற்றியுள்ளார். தேர்தல் வாக்கு உறுதி 75% நிறைவேற்றியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் கூறியது போல வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தினார். அதிமுக 5 ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. அதனால் மக்களின் அடிப்படை பிரச்னை தீர்க்கப்படவில்லை. அதற்கு காரணம் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள்தான்.

5 லட்சம் கோடி நிதிபற்றாக்குறை தமிழகத்தில் உள்ளது. அடித்தட்டு மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது வெறும் 1000 ரூபாய் கொடுத்தது அதிமுக. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு தவணையாக 4000 ரூபாய் கொடுத்துள்ளது திமுக என குறிப்பிட்டார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் மேற்கொள்ளாதது மதிமுக-விற்கு பின்னைடைவா என்ற கேள்விக்கு, எங்கள் தலைவருக்கு கோவிட் பாதிப்பு இருப்பதால் பிரசாரத்திற்க்கு வரவில்லை. வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்கிறார். வைகோ வராதது நிர்வாகிகளுக்கு தொய்வு என்று நான் பார்க்கவில்லை, அடிமட்டத்தில் நிர்வாகிகள் பணிகளை செய்து வருகின்றனர்.

மேலும் வைகோ உடல் நிலை குறித்த கேள்விக்கு, கொரோனா தொற்றுக்கு பிறகு வைகோ உடல்நிலை சீராக உள்ளது 10 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். திமுகவின் கோட்டையான சென்னையில் பாஜக ஓட்டை போடும் என்ற அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு, அண்ணாமலை எதிலும் பொய் எல்லாவற்றிலும் பொய். நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவில் தெரியவரும் என்றார்.

மறைமுக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நகராட்சி சேர்மன் மற்றும் மேயர் பதவிகளுக்கு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திமுக கூட்டணியை பொருத்தவரை அனைத்தும் சுமுகமாக நடைபெறும்.

கூடங்குளம் அணு உலை தொடர்பாக ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிடுவதை விட ஒன்றிய பாஜக அரசுடன் தாங்கள் கூட்டணியில் இருப்பதை பயன்படுத்தி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகள் சேமிக்கப்படும் விவகாரத்துக்கு தீர்வு காண ஒன்றிய அரசை அதிமுக வலியுறுத்த வேண்டும். நீட் பிரச்னை, இலங்கை பிரச்னை, கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதில் மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லை என்றார் துரை.வைகோ.

Updated On: 17 Feb 2022 5:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...