/* */

வரும் 14ம் தேதி முதல் பார்க்கிங் கட்டணம் தள்ளுபடி: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

மெட்ரோ பயணிகளுக்கு 14.06.2023 முதல் மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

வரும் 14ம் தேதி முதல் பார்க்கிங் கட்டணம் தள்ளுபடி: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு
X

பைல் படம்.

மெட்ரோ பயணிகளுக்கு 14.06.2023 முதல் மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 14.06.2023 (புதன்கிழமை) முதல் மெட்ரோ இரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும் போது வாகன நிறுத்தம் கட்டணத்தில் கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையை பொறுத்தவரை, கடந்த 30 நாட்களில் பயணிகள் மெட்ரோ இரயிலில் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்த கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

கட்டண தள்ளுபடியின் விவரங்களை மேலும் தெரிந்து கொள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள வாகன நிறுத்த கட்டண விவரங்கள் மெட்ரோ இரயில் https://chennaimetrorail.org/parking-tariff/ நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் (Banners) மற்றும் மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்தம் பணியாளர்களை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.



Updated On: 6 Jun 2023 11:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  5. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  7. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்