/* */

ஆன்லைன் விளையாட்டு: மாணவர்களைத் தடுக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

கொரோனா தொற்றால் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதால், ஆன்லைன் கேமிங்கில் ஈடுபாடு பன்மடங்கு அதிகமாகிவிட்டது.

HIGHLIGHTS

ஆன்லைன் விளையாட்டு: மாணவர்களைத் தடுக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை
X

பைல்படம்

மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாவதை தடுக்க வேண்டி வழிகாட்டி நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது..

மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு சவாலாக முளைத்துள்ள ஆன்லைன் விளையாட்டுக்களில் இருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

தொழில் நுட்பம் என்பது மனித குலத்திற்கு ஒரு பெரிய வரமாக அமைந்துள்ளது. நமது பல பணிகளை தொழில்நுட்பம் எளிதாக்கியுள்ளது. எனினும், இதில் பல எதிர்மறை விளைவுகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இது தொழில்நுட்பத்தின் யுகம். இந்த யுகத்தில் குழந்தைகளிடையே ஆன்லை கேமிங் என்பது மிகவும் பிரபலமாக உள்ளது. பல விறுவிறுப்பான தருணங்களும், பல சவால்களும் நிறைந்துள்ளதால், இது குழந்தைகளி டையே அதிக வரவேற்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்கள் இதற்கு அடிமையாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை (Online Gaming) இணையத்தின் மூலமோ, அல்லது பிற கணினி இணைப்புகள் மூலமோ விளையாட முடியும். கணினிகள், மடிக்கணினிகள், கன்சோல்கள், மொபைல் போன்கள் என பல கேமிங் தளங்களில் குழந்தைகள் இந்த விளையாட்டுகளை விளையாட முடியும். ஆன்லைன் கேம்களுக்கான அணுகல் குழந்தைகளுக்கு எந்த தடையும் இல்லாமல் கிடைத்து விடுகின்றது. கொரோனா தொற்று துவங்கியதிலிருந்து, குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகள் ஆன்லைன் கேமிங்கில் காட்டும் ஈடுபாடு பன்மடங்கு அதிகமாகிவிட்டது.

ஆனால், இந்த ஆன்லைன் கேமிங் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆன்லைன் கேமிங்கில் ஈடுபட்டு விளையாடுவதால், குழந்தைகள் அவற்றுக்கு முழுமையான அடிமையாகி மன உளைச்சலுக்கும் அழுத்தத்துக்கும் ஆளாகிறார்கள். ஒவ்வொரு லெவலும் முந்தைய கட்டத்தை விட அதிக சவால் நிறைந்ததாக இருப்பதால், குழந்தைகளுக்கு தேவை இல்லாத குழப்பமும், அழுத்தமும் ஏற்பட்டு 'கேமிங் டிஸ் ஆர்டர்' ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஒரு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கேமிங்கில் இருக்கும் எதிர்மறை விளைவுகளை கவனத்தில் கொண்டு, இதன் முறையான பயன்பாட்டை உறுதி செய்து, தேவையான இடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இதில் அறிவுறுத்தப்படுள்ளது.

பெற்றோர், ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தலில் வலியுறுத்தப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்:

செய்யக்கூடாதவை:

1, பெற்றோரின் அனுமதி இன்றி எந்த வித விளையாட்டையும் வாங்க குழந்தைகள் அனுமதிக்கப்படக் கூடாது. ஆர்.பி.ஐ (RBI) வழிகாட்டுதலின் படி, ஓ.டி.பி அடிப்படையிலான கட்டண முறையில் பணம் செலுத்தப்பட வேண்டும்.

2, விளையாட்டுகளுக்கு செலவிடப்படும் தொகைக்கு ஒரு வரம்பை வைப்பது நல்லது.

3, குழந்தைகள் லாப்டாப் அல்லது மொபைல் போன்கள் மூலம் தாங்களாக கேம்களை வாங்க அனுமதிக்காதீர்கள்.

4, தெரியாத வலைத்தளங்களிலிருந்து எந்த வித இணைப்பையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என குழந்தைகளை எச்சரிக்க வேண்டும்.

5, எந்த இணைப்பிலும், தங்களது சொந்த விவரங்களை பகிர வேண்டாம் என குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

6, பெற்றோர்கள் தங்களின் டெபிட் / கிரெடிட் கார்டுகள், OTP-ஐ பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

7, செயலிகள், இணையதளம் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எந்தவித தகவல் பரிமாற்றமும் செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு எச்சரிக்க வேண்டும்.

செய்ய வேண்டியவை:

1, இணையதளத்திலோ, செயலியிலோ ஏதேனும் விபரீதமாக நிகழ்ந்துவிட்டால் உடனடியாக ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

2, மாணவர்கள் எந்த செயலிகளை பயன்படுத்துக்றார்கள், எந்த கேம்களை அதிக நேரம் விளையாடுகிறரகள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

3, உங்கள் குழந்தை விளையாடும் கேம்களின் வயது வரம்பை செக் செய்யவும்.

4, மாணவர்கள் அடல்டு தளங்கள் / செயலிகளை பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணித்து அதை தடுத்து, அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங்கை வழங்க வேண்டும்.

5, ஆன்லைன் விளையாட்டுகள் ஒரு பொழுது போக்குதான் என்பதை புரிய வைத்து, படிப்பில் கவனம் செலுத்த அவர்களுக்கு பெற்றோர் அறிவுறை வழங்க வேண்டும்.

6, திடீரென மதிப்பெண்கள் குறைந்தாலோ, படிப்பில் கவனம் குறைந்தாலோ, பழகும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஆசிரியர்கள் உடனே அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Updated On: 26 Sep 2021 9:44 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்