/* */

பிரம்மசாரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு கல்யாணமே வேணாம் சாமி.... அலறும் இளைஞர்கள்....

no of brahmachari raised we dont want marriage தமிழகத்தில் இன்று கல்யாணம் ஆகாதவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண் வீட்டார் போடும் கன்டிஷன்களே இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர் பலர்,

HIGHLIGHTS

பிரம்மசாரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு  கல்யாணமே வேணாம் சாமி....  அலறும் இளைஞர்கள்....
X

no of brahmachari raised we dont want marriage




no of brahmachari raised we dont want marriage

தமிழகத்தில் பெண்ணை பெற்ற பெற்றோர்கள் போடும் கன்டிஷன்களால் திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கஷ்டந்தான் என மகன்களைப் பெற்ற பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிரு... ஆயிரம்பொய் சொல்லி கல்யாணம் செய்யலாம்... என்பது நம் பேச்சு வழக்கில் இருந்தாலும் இது அந்த காலத்திற்கு பொருந்தியதால் இதுபோன்ற சொலவடைகள் உருவாகின என்று கூட சொல்லலாம். ஆனால் தற்கால நாகரீக மோக உலகில் இது வெல்லாம் எதற்கும் சரியாக படுவது போல் தெரியவில்லை.

திருமணங்கள் அக்காலத்தில் பெரியவர்களால் பார்த்து நடத்தப்பட்டதே அதிகம். பெண் என்பவள் அச்சம், மடம்,நாணம், பயிர்ப்பு போன்ற குணநலன்களுடன்இருக்கவேண்டும். அக்காலத்தில் பெண்கள் அடிமைத்தனமாக நடத்தப்பட்டனர் என்பதற்கு பல சான்றுகள்உள்ளன. அதேபோல கணவன் பெயரைக்கூட சப்தமாக வெளியில் அக்காலத்தில் பெண்கள் சொல்லமாட்டார்கள். இதனை பழைய சினிமாக்களில் இப்போது கூட காணலாம். கணவன் வாழை இலையில் உணவு உண்ட பின் அதே இலையில் மனைவி அமர்ந்து சாப்பிட்ட காலங்கள்உண்டு. இதுவெல்லாம் இப்போது நடைமுறையில் உள்ளதா என கேட்கிறீர்களா? அதுதான் இல்லை.

no of brahmachari raised we dont want marriage


no of brahmachari raised we dont want marriage

புதுமைப்பெண்

''அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு'' என்று இருந்த நிலை மாறி பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்ற அளவிற்கு அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியில் உள்ளனர். முண்டாசுக்கவி பாரதி புதுமைப்பெண் என்ற வார்த்தையினை உச்சரித்ததோடு அவர் வாழ்ந்த காலத்தில் பலமாற்றங்களைக்கொண்டு வர பாடுபட்டதோடு பல கவிதைகளில் இதனை வெளிப்படுத்தியும் உள்ளார். அக்காலத்தில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அக்காலத்தில் பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் படிக்கும் பழக்கம் இல்லாமல் இருந்தது. அதாவது பருவம் அடைந்து விட்டால் உடனடியாக திருமணம் என்ற நிலைஇருந்தது. மேலும் பல பெண்கள் கல்விச்சாலை பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்தவர்களும் இருந்தனர். இவையெல்லாம் காலப்போக்கில் மாறி இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டதோடு, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்று சொல்லும் அளவிற்கு பல துறைககளில் சாதனை படைத்து வருகின்றனர்.

பெண்களுக்கு உயர்கல்வி

அக்கால வழக்கத்தில் கல்வியைக் கற்க முடியாத தாய், தந்தையர் தற்போதுள்ள பெண் குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என விரும்பி குறைந்த பட்சக்கல்வியாக இருந்த பிளஸ் 2 படிப்போடு நிறுத்திவிடாமல் உயர்கல்வி கற்க காலேஜிற்கும் அனுப்பினர். இதனால் பெண்கள் கல்வித்துறையில் சாதனை படைக்க துவங்கினர். இதனால் அவர்களால் எளிதில் வேலைகளையும் பெற முடிந்தது. இன்றளவில் கல்வி, வேலைவாய்ப்புகளில் அனைத்து துறைகளிலும் பெண்களின் எண்ணிிக்கையானது கணிசமாக உயர்ந்துள்ளது. ஐ.டி. துறைகளில் இவர்களே அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதை யாராலும் மறுக்க முடியாது. சொல்லப்போனால் ஆண்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் நிலைக்கு உயர்ந்ததால் திருமணத்திற்காக இவர்களுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது பல கன்டிஷன்களை பெண் வீட்டார் போடும் நிலையே இன்றளவில் தொடர்கிறது.

பெண்கள் போடும் கன்டிஷன்கள்

நாடு முழுவதும் திருமண புரோக்கர்கள், மேட்ரிமோனியல் நிறுவனங்கள் என பல இருந்தாலும் அவைகள் மூலமாக திருமணங்கள் நடப்பது தற்போது குறைந்து வருகிறது. மீடியேட்டர்களை நம்பி ஒரு சில பெற்றோர்கள் பெண்களையோ, ஆண்களையோ திருமணம் செய்ய விரும்புவதில்லை. பல தகவல்கள் முன்னுக்குபின் முரணாக இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அதோடு இதற்காக வாங்கும்கட்டணமும் உச்சபட்சமாக இருப்பதால் தானாகவே உறவினர்கள் தெரிந்தவர்கள் மூலம் வரன் பார்க்க களத்தில் இறங்குகின்றனர். இது போல் அவர்கள் தேடினாலும், அவர்கள் போடும் கன்டிஷன்களுக்கு எவர் ஒப்புக்கொள்கிறாரோ அவரையே மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்கின்றனர். அந்த கன்டிஷன்களையும் கறாராக போடுவதால் பலர் இதனை விரும்பாததால் திருமணமாவது தள்ளிப்போகிறது.

no of brahmachari raised we dont want marriage


no of brahmachari raised we dont want marriage

பிரம்மசாரிகள் அதிகரிப்பு

தமிழகத்தினைப்பொறுத்தவரை திருமண வயது என்பது பெண்களுக்கு 18ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் இருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த வயதில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையானது கணிசமாக குறைந்து வருகிறது. காரணம் என்னவெனில், பலர் உயர்கல்வி படிக்க விரும்புவதால் இந்த வயதினையும் தாண்டிவிடுவதால் கல்வி கற்றபின் நல்லவேலைக்காக பலஆண்டுகள் காத்து கிடக்கின்றனர்.

ஒரு சிலருக்கு மட்டுமே நல்ல வேலை கிடைக்கிறது. ஆனால் ஒருசிலருக்கோ வேலையே கேள்விக்குறியாகிவிடுகிறது. இந்நிலையில் அவர்களுக்கு கல்யாணம் என்ற நினைப்பே வருவதில்லை. இவர்களுக்கே வயதாகிவிடுவதோடு வயதான பெற்றோரை அருகிலிருந்து பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.இதனால் பலவித பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் சமீப காலத்தில் பிரம்மச்சாரிகள் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம் ஒரு சில பிரிவினரிடையே மட்டுமே திருமண தாமதம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் இன்று எல்லா பிரிவுகளிலும் இதே நிலையே நீடிக்கிறது.

no of brahmachari raised we dont want marriage


no of brahmachari raised we dont want marriage

கல்யாணமே வேணாமடா சாமி....

திருமணங்கள் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் சொல்லி சென்ற வாசகந்தான் இது. அதுவே இக்கால இளைஞர்களைக் கேட்டால் சொர்க்கமா... சாமி கல்யாணமே வேணாமடா சாமி என பயந்து அலறியடித்துக்கொண்டு ஓடுகின்றனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும்போது, திருமணம் ஆன பின் என்னுடைய பெற்றோருடன்தான் சேர்ந்து வாழவேண்டும் என சொன்னால் அதற்கு எந்த பெண்களும் ஒப்புக்கொள்வதே இல்லை. தனிக்குடித்தனம்தான் வரவேண்டும் என கன்டிஷன் போடுவதால் பல இளைஞர்கள் இந்த ஒருவிஷயத்துக்காகவே கல்யாணம் செய்ய வருவதில்லை. அவர்களின் பெற்றோர்களை பெரிதாக நினைக்கும் அவர்கள் மாமனார், மாமியார்களுக்கு எல்லாம் உரிய இடத்தினை அளிப்பதே இல்லை. இதனால்தான் பல இளைஞர்கள் கல்யாணம் செய்துகொண்டு கஷ்டத்தினை அனுபவிப்பதை விட , தனக்குள்ள சம்பாதியத்தில் சந்தோஷமாக வாழ முடிவெடுத்து பிரம்மச்சர்யம் எனும் அஸ்திரத்தினை கையில் எடுக்க துவங்கியுள்ளனர்.

சகிப்புத்தன்மை அதிகம் தேவை

திருமணமாகி 20 வருடம் மற்றும் 40 வருடங்களுக்கு மேலும் இன்றும் இணைபிரியாமல் வாழும் ஆதர்ஷ தம்பதிகளை நாம் கண்டு வருகிறோம். இதில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் அதிர்ச்சியில் மற்றொருவரும் கண நிமிஷத்தில் இறந்துபோவதையும் செய்திகளின் மூலம் அறிகிறோம். அந்த அளவிற்கு அக்கால தம்பதியினர் விட்டுக்கொடுத்து, பகைமை பாராட்டாமல், சகிப்புத்தன்மையோடு நல்ல அன்பின் அடையாளமாக வாழ்ந்து காட்டியவர்கள் பலர். ஆனால் இக்காலத்திலோ திருமணமாகி 1 வருடம் ஏன்? 6 மாதம் கூட ஒன்றாக வாழ்வதில்லை.

ஏதாவது ஒரு காரணத்தினை சொல்லி பெற்றோர்களிடம் அடித்த பந்து போல் வந்துவிடுகின்றனர் ஒரு சில பெண்கள். அவர்களிடம் போதிய சகிப்புத்தன்மை இல்லை. மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவருமே ஒன்றுதான். இதில் மாப்பிள்ளையின் அப்பா, அம்மா, பெண்ணின் அப்பா, அம்மா என்ற பேதம் பார்க்காமல் யார் மனதளவில் சேர்ந்து வாழ நினைக்கிறார்களோ அத்தகைய பெண்களே வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள்.... ஜெயித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

no of brahmachari raised we dont want marriage

எளிய வாழ்க்கையே நிம்மதி

இக்கால பெண்கள் மற்றவர்களோடு ஒப்புமைப்படுத்தி வாழ்கிறார்கள். இதனால் ஆண்கள் பெருமளவில் பாதிப்படைகின்றனர். அவர்களின் வருவாய்க்குள் தன் மனைவி சொல்வதை அவர்கள் செய்ய இயலாத நிலையில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதையே அல்லது கடன் வாங்கவோ செய்கின்றனர். பக்கத்துவீட்டில் இப்படி வாழ்கின்றனர்? அப்படி வாழ்கின்றனர்? என தன் கணவர்களை அரித்து கடன் வாங்க சொல்லி கடைசியில் விபரீதத்தினை தேடிக்கொள்வது இன்று பலரது வாழ்க்கையில் நடந்து வருகிறது. இதனை அனைவருமே மனதில் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள். படோடோபமான வாழ்க்கை கடன் வாங்கி வாழ்வதை விட, எளிய வாழ்க்கை வாழ்ந்து ஏற்றம் பெற எண்ணுங்கள். அதுவே காலத்திற்கும் நிலைக்கும். எந்த விஷயமானாலும் அதில் ஈகோ பார்க்காமல் விட்டுக்கொடுத்துச்செல்ல வேண்டும். இப்படி சில காலம் வாழ்ந்து பாருங்கள்... விமோசனம் பல விஷயங்களுக்கு கிட்டும் என்பதே நிதர்சனமான உண்மை.

Updated On: 20 Sep 2022 2:18 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?