/* */

தமிழகத்தில் பொதுஇடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்:பொதுசுகாதாரத்துறை

mask wear ,compulsory at tamilnadu தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் அரசு மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது. அனைவரும் பின்பற்றுங்க....படிங்க..

HIGHLIGHTS

தமிழகத்தில்  பொதுஇடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்:பொதுசுகாதாரத்துறை
X

தமிழகத்தில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு  கொரோனா பரிசோதனை (கோப்பு படம்)

mask wear ,compulsory at tamilnadu


mask wear ,compulsory at tamilnadu

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையொட்டி மாநில சுகாதாரத்துறை சார்பில் ஆஸ்பத்திரிகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோரும் மாஸ்க் அணிந்து செல்லவேண்டும் என கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்காக மத்தியஅரசு கூட்டம் நடத்தி மாநில அரசுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது. இதனையடுத்து தமிழகத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்வோர் ஆஸ்பத்திரியில் பணிபுரிவோர் ஆகியோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிட்டது.

அண்மையில் திருச்சியில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றவர் திடீரென மரணம் அடைந்ததையடுத்து இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டன.

mask wear ,compulsory at tamilnadu


mask wear ,compulsory at tamilnadu

கொடிய நோய் கொரோனா

கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயானது கடந்த 2020 ம் ஆண்டில் சீனாவிலிருந்து துவங்கி உலக நாடுகள் அனைத்திலும் பரவி உச்சத்தைத் தொட்டதால் லட்சக்கணக்கிலான மக்கள் உயிரிழந்தனர். உலக நாடுகள் அனைத்துமே அதிர்ச்சியடைந்து பல்வேறு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியதோடு ஊரடங்கினையும் அறிவித்து பின்னர் பாதிப்பு குறைந்த பின் தளர்த்தியது நினைவிருக்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் பல மாதங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தி பின்னர் படிப்படியாக மத்திய அரசானது தளர்த்தியது. இதனால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதோடு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் கொரோனா தடுப்பூசிகளான கோவேக்சின், கோவிஷீல்டு ஆகியவைகளை கட்டாயம் போட்டுக்கொள்ளவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில்அனைத்து மாநிலங்களுக்கும் கடுமையான உத்தரவிடப்பட்டது.

mask wear ,compulsory at tamilnadu


mask wear ,compulsory at tamilnadu

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இதற்கான முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வழி வகை செய்யப்பட்டது. இரண்டு தடுப்பூசிகளையும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்எனவும் மாநில , மத்திய அரசுகள் வலியுறுத்தியதின் பேரில் பலர் தாமாக முன் வந்து ஊசி போட்டுக்கொண்டனர். இதனால் கொரோனா பரவலானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மாமூல் வாழ்க்கை தொடர்ந்தது.

mask wear ,compulsory at tamilnadu


mask wear ,compulsory at tamilnadu

மீண்டும் கொரோனா பரவல்

தற்போது பல மாதங்களுக்கு பிறகு கொரோனா பரவலானது நாளுக்கு நாள் பாதிப்போரின் எண்ணிக்கையானது உயர்ந்து வருவதால் மாநில அரசு கட்டாய உத்தரவிட்டுள்ளது. அதில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆஸ்பத்திரிக்கு செல்வோர் மற்றும் ஆஸ்பத்திரியில் பணிபுரிவோர் ஆகியோர் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.பின்னர் பொது இடங்களுக்கு செல்வோர் அதாவது மக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்க்கெட், சினிமா தியேட்டர், பொது நிகழ்ச்சிகள், கடைவீதி, கடைகள் உள்ளிட்டஇடங்களுக்கு செல்வோரும் மாஸ்க் அணிந்து செல்லவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் முன்பு போலவே மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் வசூல் செய்யும் நடைமுறையும் அமலுக்கு வர வெகு நாள் இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

mask wear ,compulsory at tamilnadu


mask wear ,compulsory at tamilnadu

உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்

வயதானவர்கள், உடல் நலிந்தோர் என பலரும் இந்த உத்தரவு வராத நிலையிலும் ஒருசிலர் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்துதான் சென்றனர். ஆனால் அதுபோல் சென்றவர்களை சமூகமே அதிசயமாக பார்த்தது. ஆனால் அவர் பாதுகாப்புடன் இருக்கிறார் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. தற்போது திடீரென அரசு அறிவித்துள்ளதால் பலரும் மாஸ்க் அணிய துவங்கியுள்ளனர். தற்போது மீண்டும் மாஸ்க் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில்தான் உள்ளது. கொரோனா என்ற கொடிய நோய் யாரைத் தாக்குகிறது என்பதே புதிராக உள்ளது.

mask wear ,compulsory at tamilnadu


mask wear ,compulsory at tamilnadu

கடந்த 2020 ம் ஆண்டு அலையின் போது நன்கு நடமாடியவர்கள்கூட திடீர் திடீரென இறக்கும் சூழல் இருந்தது. இதனால் உறவுகள் கூட இறந்தவர்களுடைய இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள இயலாத நிலை நீடித்தது அப்போது. ஆனாலும் நம்மை விட்டு கொரோனா என்ற அரக்கன் முழுவதுமாகச் சென்றுவிடவில்லை என்றே தோன்றுகிறது. எங்கோ, எப்படியோ யாரையாவது ஒருவரை தாக்கி பரவச்செய்துகொண்டிருக்கிறான் இந்த அரக்கன். எனவே அனைவருமே அதுவும் ஏசி ரூமில் இருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசத்தினை அணிந்து கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பானது . வெயில் காலம் என்பதால் பலரும் ஏசி அறையில்தான் உலாவுகின்றனர். ஒரு புறம் உடல் குளிர்ச்சியைக் கேட்டாலும் நம் உயிர் பாதுகாப்பும் முக்கியம் என்ற கண்ணோட்டத்தில் செலவு பாராமல் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்...அது உங்களைத் தொற்றிலிருந்து முழுவதுமாக கண்டிப்பாக பாதுகாக்கும். உங்கள் பாதுகாப்பு உங்கள் கைககளில்தான் உள்ளது மற்றவர்கள் கைகளில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்...சப்தமின்றி தாக்கும் கொடிய வைரஸ் கொரோனாவிலிருந்து தப்பிக்க வழிபாருங்கள் பொதுமக்களே...பாதுகாப்போடு இருங்க...மாஸ்க் அணிந்து.

Updated On: 4 April 2023 6:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்