பாரிமுனையில் திருமண ஆசைக்காட்டி பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது

பாரிமுனை பகுதியில் பெண்ணை திருமண ஆசைக்காட்டி கர்ப்பிணியாக்கியவரை துறைமுகம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பாரிமுனையில் திருமண ஆசைக்காட்டி பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது
X

பைல் படம்.

சென்னை, பாரிமுனை பகுதியை சேர்ந்த சுகந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (பெ/25) என்பவர் திருமணமாகி 3 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நவீன்குமார் என்பவர் சுகந்திக்கு அறிமுகமாகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை உறவு கொண்டுள்ளார். இதனால் சுகந்தி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளதால், நவீன்குமாரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் நவீன்குமார், சுகந்தியை திருமணம் செய்துகொள்ள மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். இந்த சம்பவம் குறித்து சுகந்தி, துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, எதிரி நவீன்குமார் (வ/23) பெரும்பாக்கம் என்பவரை கைது செய்தனர்.

Updated On: 14 Oct 2021 5:23 PM GMT

Related News