Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
வண்டலூரில் உயிரியல் பூங்கா : பத்பநாதன் என்ற ஆண் சிங்கம் கொரோனோ பாதிப்பால் உயிரிழப்பு..!

சென்னை: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பத்பநாதன் என்ற ஆண் சிங்கம் கொரோனோ பாதிப்பால் உயிரிழந்துள்ளது.
சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் பகுதியில் உள்ள 12 வயதுள்ள பத்பநாதன் என்ற ஆண் சிங்கம் SARS-Cov-2 தொற்று (பாசிட்டிவ்) காரணமாக உயிரிழந்துள்ளது.
இந்த சிங்கத்தின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு (NHSAD) அனுப்பப்பட்டதில் அந்நிறுவனத்தின் அறிக்கையில் இச்சிங்கத்திற்கு SARS-Cov-2 தொற்று (பாசிட்டிவ்) உள்ளது என்று தெரியவந்ததை தொடர்ந்து அச்சிங்கம் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.