/* */

கொளத்தூரில் வீடு புகுந்து திருடிய கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது

சென்னை கொளத்தூரில் வீடு புகுந்து திருடிய கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

சென்னை கொளத்தூர் ஜவஹர் நகர் ஜி கே எம் காலனி 37வது தெருவைச் சேர்ந்தவர் ரகு 45 இவரது மனைவி சபி வயது 41 இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3ஆம் தேதி ரகு மற்றும் இரண்டாவது மகன் அலெக்சாண்டர் ஆகிய இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மூத்த மகன் பாலாஜி என்பவர் அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்க்கு சென்று இருந்தார்.

அப்போது வீட்டில் சபி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் வந்த இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கதவை மூடிவிட்டு சபி அணிந்திருந்த 5 சவரன் தங்க நகைகளை எடுத்துச் கொண்டு வீட்டின் வெளியே வந்தனர். கடைக்கு சென்றிருந்த பாலாஜி அவர்களை பிடிக்க முற்பட்ட போது கையில் வைத்திருந்த கத்தியால் அவர்கள் பாலாஜியை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மீட்டு அருகில் இருந்த பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கொடுங்கையூர் பகுதியில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கார்த்திக் 23 என்கின்ற நபர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து முதலில் ரெட்டில்ஸ் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கை கைது செய்த கொளத்தூர் போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் கொளத்தூர் செல்லியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி 23 மற்றும் அவரது மனைவி திவ்யா 19 ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் திவ்யா என்பவர் வீடுகளை உளவு பார்த்து தனது கணவர் பாலாஜியிடம் எந்த வீட்டில் திருடலாம் என தகவல் கூறியதாகவும் அதனடிப்படையில் பாலாஜி அவரது நண்பர் கார்த்திக்கை வைத்து திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேர் மீதும் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 12 March 2022 4:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு