/* */

கொளத்தூரில் ரவுடிக்கு கத்திகுத்து: 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

கொளத்தூரில் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடிவுக்கு கத்தி குத்து. மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கொளத்தூரில் ரவுடிக்கு கத்திகுத்து: 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
X

பெரவள்ளூரில் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடிவுக்கு கத்தி குத்து.

சென்னை அண்ணனூர் ஸ்ரீசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகாந்த் வயது 35. இவர் அவரது பாட்டி பாப்பம்மா என்பவரை பார்ப்பதற்காக நேற்று மாலை பெரவள்ளூர் ஜி கே எம் காலனி 29வது தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அதன்பிறகு மாலை 4 மணி அளவில் ஜி கே எம் காலனி 30 வது தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் வந்து கிருஷ்ணகாந்தை சரமாரியாக வெட்டினர்

இதில் கிருஷ்ணகாந்த் தலை ,மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கிருஷ்ணகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெட்டுப்பட்ட கிருஷ்ணகாந்த் மீது பெரவள்ளூர் கொளத்தூர் ராஜமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Updated On: 27 Feb 2022 6:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’