சென்னையில் அமைந்துள்ள கிஷ்கிந்தா தீம்பார்க்: அரசுக்கு சொந்தமான நிலம்

சென்னையில் கிஷ்கிந்தாஅமைந்துள்ள 177 ஏக்கர் நிலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் என உறுதிபடுத்தப்படும்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சென்னையில் அமைந்துள்ள கிஷ்கிந்தா தீம்பார்க்: அரசுக்கு சொந்தமான நிலம்
X

சென்னையில் அமைந்துள்ள கிஷ்கிந்தா தீம் பார்க் அமைந்துள்ள177 ஏக்கர் நிலமும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கை என 120 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த மானிய கோரிக்கை வருவதற்குள் தற்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 50% நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அந்த அறிவிப்பில், கோயிலிகளில் முடிகாணிக்கை அளிக்க (மொட்டை) கட்டணம் இல்லை என்பது உள்ளிட்ட 5 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் லயோலா கல்லூரி அமைந்திருக்கும் இடம் எந்த திருக்கோவிலுக்கும் சொந்தமானது இல்லை என்று தெரிய வந்துள்ளது .கிஷ்கிந்தா தீம்பார்க் அமைந்திருக்கும் இடம் ஜமீன்தார் ஒழிப்பு சட்டம் மூலம் கிடைத்த நிலம்.

கிஷ்கிந்தா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலமும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் தான். இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநர்களிடம் ஆலோசித்து சட்டப் போராட்டம் நடத்தி அந்த இடம் கோவில் நிலம் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டிற்குள் 500 கோயில்களுக்கு திருப்பணிகள் செய்யப்படும். ப யன்பாட்டில் இல்லாத நகைகளை ஒன்றிய அரசின் அலுவலகத்தின் ஒப்புதலோடு தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு..

Updated On: 23 Sep 2021 4:27 PM GMT

Related News

Latest News

 1. அந்தியூர்
  ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
 2. விளையாட்டு
  டி20 உலககோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில்...
 3. வேலூர்
  வேலூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 16 பேர்...
 4. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர்...
 5. அந்தியூர்
  அந்தியூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
 6. கோவை மாநகர்
  பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான விமானப்படை அதிகாரியை விசாரிக்க...
 7. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மூவருக்கு மட்டுமே கொரோனா நோய் தொற்று...
 8. தமிழ்நாடு
  தமிழகத்தில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பேர் பயன்
 9. விக்கிரவாண்டி
  பனப்-பாக்கம் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்
 10. திண்டிவனம்
  உ.பியில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி: திண்டிவனத்தில் அஞ்சலி