/* */

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடமையாக்கிய சட்டம் ரத்து : ஐகோர்ட் அதிரடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீடு அரசுடமையாக்கிய சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

HIGHLIGHTS

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடமையாக்கிய சட்டம் ரத்து : ஐகோர்ட் அதிரடி
X

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாயார் வங்கிய சொத்து போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லம். இதனை ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மற்றும் மகள் தீபாவிற்கு சென்று விடக் கூடாது.

அவர் அந்த இடம் அவர்களிடம் சென்றால் அவர்கள் சசிகலாவிடம் ஒப்படைக்கக் கூடும் என்று நினைத்த அன்றைய அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கியது.

இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்திருந்தனர். அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வேதா நிலையம் தொடர்பான வழக்குகளில் இன்று மதியம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், வேதா நிலையத்தின் சாவியை 3 வாரத்தில் மனுதாரர்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. வேதா நிலையத்துக்கு இழப்பீடாக செலுத்தப்பட்ட 67 கோடியே 90 லட்சம் ரூபாயை அரசிடம் திருப்பி வழங்கவும் உத்தரவிடப்பட்டது. ஜெயலலிதாவுக்கு வேதா நிலையம், பீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடம் எதற்கு? என நீதிபதி கேள்வியையும் எழுப்பினார்.

இதன் மூலம் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசுகள் தீபக், தீபா என்பதை நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. அப்படியானால் அரசியலிலும் மாற்றும் ஏற்படுமா என குழப்பத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிள் உள்ளனர்.

Updated On: 24 Nov 2021 10:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  2. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  4. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  5. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  6. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  7. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  8. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!