/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணத்திற்கான அரசாணை வெளியீடு

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள், அவர்களுடன் பயணிக்கும் உதவியாளர் ஒருவர் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கு  இலவச பேருந்து பயணத்திற்கான  அரசாணை வெளியீடு
X

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள், அவர்களுடன் பயணிக்கும் உதவியாளர் ஒருவர் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

முன்னதாக மகளிர் மற்றும் திருநங்கைகள் போல தங்களுக்கும் கட்டணமில்லா பயண திட்டத்தை அறிவிக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் முதல்வருக்கு வேண்டுகோள் வைத்ததை தொடர்ந்து, கடந்த ஜூன் 3ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரப்பூர்வ அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மாற்றுத்திறன் உடையவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் எனவும் அவர்களுடன் ஒரு உதவியாளரும் பயணிக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On: 10 Jun 2021 3:08 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்