/* */

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: ஓபிஎஸ்

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: ஓபிஎஸ்
X

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தமிழக முதல்வர் ஸ்டாலின், (பைல் படங்கள்)

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2011 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ரொக்கமாக வழங்கப்பட்டு வந்தது.

2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தலுக்கு பின் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலைமை பரிதாபத்திற்குள்ளாகியது. ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 விழுக்காடு அகவிலைப்படியை மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் அளித்தபோது, அதனை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விரிவுபடுத்தாமல், 1.4.2022 முதல் வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்தது.

பின்னர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து மூன்று மாதங்கள் முன்னதாக, அதாவது 1.1.2022 முதல் வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்தது.

இந்த சூழ்நிலையில், தீபாவளி பரிசாக, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் 3 விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி உள்ளது. அதாவது 1.7.2021 முதல் 31 விழுக்காடு அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறப்போகிறார்கள்.

ஆனால் மாநில அரசு ஊழியர்கள் 17 விழுக்காடு அகவிலைப்படியை தான் பெற்று வருகிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குமான அகவிலைப்படி வித்தியாசம் 14 விழுக்காடு, இந்த 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளி பரிசாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பதே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தேர்தலுக்கு முன், பழைய ஓய்வூதியத்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து விட்டு, தேர்தலுக்குப் பின், விலைவாசி உயர்வை ஓரளவு ஈடுகட்ட வழங்கப்படும் அகவிலைப்படியையே நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

எனவே மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படியை அளித்ததுபோல், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க முதல்- அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Updated On: 22 Oct 2021 1:25 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...