/* */

கொரோனா பாதிப்பால் வாக்களிப்பு சதவீதம் குறைவு- அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கொரோனா பாதிப்பால் வாக்களிப்பு சதவீதம் குறைந்து விட்டதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறினார்.

HIGHLIGHTS

கொரோனா பாதிப்பால் வாக்களிப்பு சதவீதம் குறைவு- அமைச்சர் மா. சுப்பிரமணியன்
X

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.

சுதந்திர போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்களிப்பை பறை சாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு அலங்கார ஊர்தி சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மலர்தூவி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் குடியரசு தின விழாவினையொட்டி முதலமைச்சர் துவக்கி வைத்த 3 அலங்கார ஊர்திகளும் 2100 கிலோமீட்டர் பயணித்து சென்னை வந்துள்ளது. 4 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வைத்து உள்ளோம் என்றார்.

மேலும், தமிழக முதல்வர் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை அறிமுகம் செய்தார். மக்களை தேடி மருத்துவத்தின் 50 வது லட்சமாவது பயனாளி விழா மற்றும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் 20 ஆயிரமாவது பயனாளியோடு சந்திப்பு 21 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த நிகழ்வு வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சிறிய அளவிலான அசம்பாவிதம் கூட இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்துள்ளதாகவும், சென்னையில் ஓரீரு இடங்களில் தான் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதை ஊதி பெரிதாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் திட்டம் வீணாகி விட்டது எனவும் கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், வாக்குப்போட வந்தவர்கள் மிக மகிழ்ச்சியாக வந்தனர். கொரோனா பேரிடர் பாதிப்பு காரணமாக மக்கள் சொந்த ஊருக்கு சென்றதால் 15% வரை மக்கள் வாக்களிக்கவில்லை. அதன் காரணமாகவே தொடர்ச்சியாக அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. குடிசைப்பகுதி மக்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர். ஆனால் மெத்தப்படித்தவர்கள், மெத்தை வீட்டில் இருப்பவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள். அதை நிவர்த்தி செய்வது நமது கடமை. ஆனால் வாக்களிப்பது அவர்களுடைய கடமை. வரும் காலங்களில் வாக்களிப்பார்கள் என எண்ணுகிறேன் என்றார்

Updated On: 20 Feb 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...