/* */

சென்னை:போதைக்காக தின்னர் குடித்த மதுப்பிரியர்! பிரியா விடைபெற்ற சோகம்!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் மது கிடைக்காத போதை ஆசாமி தின்னரை குடித்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சென்னை:போதைக்காக தின்னர் குடித்த மதுப்பிரியர்! பிரியா விடைபெற்ற சோகம்!!
X

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, மதுக்கடைகள் திறக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்களுக்கு திண்டாட்டம் ஏற்பட்டது. கள்ளச்சந்தையில் சிலர் அதிக விலை கொடுத்து மதுவை வாங்கி குடிக்கின்றனர். ஆனால் பணம் இல்லாத மதுப்பிரியர்கள் போதைக்காக சில நச்சு தன்மை கொண்டவற்றை உட்கொள்ளும் அளவுக்கு செல்கின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் குட்டி தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 48). தீவிர மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர். மது கிடைக்காத விரக்தியில் வீட்டில் பெயிண்டில் கலக்க வைத்திருக்கும் தின்னரை எடுத்து குடித்துள்ளார். இதனால் தீராத வயிற்று வலியால் துடித்த அவர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் போனதால் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Jun 2021 7:32 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  2. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  4. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  5. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  6. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  7. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  9. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  10. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!