/* */

விநாயகர் சதுர்த்திக்காக தமிழகத்தில் விற்பனைக்கு வந்த விநாயகர் சிலைகள் அட்வான்ஸ் புக்கிங்.... ஜோர்....

Vinayagar Silaigal-நாடுமுழுவதும் இம்மாதம் 31 ந்தேதியன்று விநாயகர் சதுர்த்தியானது விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இதற்காக பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

HIGHLIGHTS

Vinayagar Silaigal
X

Vinayagar Silaigal


நாடு முழுவதும் இம்மாதம் 31 ந்தேதியன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

Vinayagar Silaigal-இதற்கான சிலைகள் விற்பனை தற்போதிருந்தே படுஜோராகநடந்து வருகிறது.வடமாநிலங்களில் கணேஷ்சதுர்த்தி என்றும், தென்இந்திய மாநிலங்களில் பிள்ளையார் சதுர்த்தி அல்லது விநாயகர் சதுர்த்தி என்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஆன்மீகப் பற்று என்பது அனைவருக்குமே உண்டு.அந்த வகையில் தமிழகத்தினைப்பொறுத்தவரை எந்த ஒரு செயல் புதியதாக துவங்கப்பட்டாலும் அதற்கு கணபதி ஹோமத்தினை செய்துதான் துவங்குவர். அவ்வளவு பிரசித்தமான முதற் கடவுள் விநாயகருக்கு சதுர்த்தி திருநாளில் கொண்டாடப்படுவதுதான் விநாயகர் சதுர்த்திஆகும்.இதனையொட்டி தமிழகத்தில் பிள்ளையார் பட்டியில் விமர்சையாக பத்து நாட்களுக்கு மேல் விசேஷங்கள் நடப்பது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடும் பண்டிகையாக இது இருப்பதால் அனைவரும் இதனை விமர்சசையாக கொண்டாடுவர்.

மஞ்சளிலே செய்யணும் மண்ணினாலே செய்யணும் என்ற வார்த்தைக்கேற்ப சாதாரண மஞ்சளிலும் பிள்ளையார் உருவெடுப்பார். அதேபோல் களிமண்ணிலும் உருவெடுக்கக்கூடிய ஒரே இறைவன் பிள்ளையார் மட்டுமே.சேலம் மாநகரில் மையமாக வீற்றுள்ள ராஜகணபதி கோயிலில் 10 நாட்களுக்கு இவ்விழாவானது விமர்சையாக கொண்டாடப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இப்பண்டிகையை பொதுஇடத்தில்கொண்டாட அனுமதி வழங்கவில்லை.இந்த ஆண்டு பரவல் கட்டுக்குள் உள்ளதால் அனுமதி வழங்குவார்கள் என பக்தர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

அபார்ட்மென்ட், நண்பர்கள் குழு, ஆன்மீக குழு, பக்தர்கள் குழு, போன்ற தனி அமைப்புகளின் சார்பில் அவரவர்களின் நிதி நிலைக்கு தகுந்தவாறு விநாயகர் சிலைகளை முந்தைய நாள் இரவே வைத்துவிடுவார்கள். பின்னர் விநாயகர் சதுர்த்தியன்று சாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து அதற்குரிய பிரசாதத்தினை அனைவருக்கும் உபசரிப்பார்கள்.இதுபோல் ஒற்றுமையை உண்டாக்கும் பண்டிகையாகவும் விநாயகர் சதுர்த்தி திகழ்கிறது.

விதவிதமான வடிவம்

ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சிலை வடிவமைப்பாளர்கள் புதிய புதிய வடிவத்தில் சிலைகளை வடிவமைத்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருவார்கள். பண்டிகை முடிந்த மறுநாள் இதுபோல்வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது மரபு என்பதால் நீர்நிலைகள் கெடாதவகையில் ரசாயன கலப்பின்றி சிலைகளை வடிவமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல் கிழங்கு மாவில் தயாரிக்கப்பட்ட சிலைகள் தற்போது ரெடியாகி விற்பனைக்கு வருகிறது.முன்பெல்லாம் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் கொண்டு செய்யப்பட்டசிலைகள் விற்பனைக்கு வந்தன. தற்போது இதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வண்ண வண்ண வடிவங்களில், விநாயகர் உருமாறி விற்பனைக்காக வைக்கப்படுவது ஆண்டுதோறும் வழக்கமான ஒன்று. சிலையின் சைஸ் பொறுத்து விலையானது நிர்ணயிக்கப்படும். இதனால் பலர் ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஒன்று சேர்ந்து வந்து சிலைகளைப் பார்த்துசெலக்‌ஷன் செய்து அட்வான்ஸ் புக் செய்துவிட்டுசெல்வோரும் உண்டு.

வரும் 31 ந்தேதி விநாயகர் சதுர்த்தியானது கொண்டாடப்பட உள்ளதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துவிட்டன.

சேலம் மாநகரைப்பொறுத்தவரை ராஜகணபதி கோயிலில் 10 நாட்கள் கொண்டாடப்படுவது ஆண்டுதோறும் வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படும் என்பதால் பக்தர்கள்பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் ராஜகணபதி காட்சியளிப்பதைக் காண்பது சேலம் மாவட்ட மக்களுக்கே கிடைத்த பேறு ஆகும். ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு இன்னிசைக் கச்சேரியானது நடக்கும். 10 நாட்களுக்கு இவ்வழியில் கனரக போக்குவரத்தானது தடை செய்யப்படும்.தற்போது மூலப்பொருட்களின் விலை கூடியதால் இந்த ஆண்டு கடந்த ஆ ண்டுகளைக் காட்டிலும் சிலைகள் விலை சற்று கூடியதாகவே தெரிகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 1 April 2024 5:06 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  3. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  4. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  7. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  8. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!