/* */

டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள்; வடிவமைக்க திட்டம்

இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, சென்னையில், டிரைவர் இல்லாமல் தானாக ஓடும் மெட்ரோ ரயில்களில் மக்கள் பயணிக்கலாம்.

HIGHLIGHTS

டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள்; வடிவமைக்க திட்டம்
X

சென்னையில், டிரைவர் இல்லாமல் தானாக ஓடும் மெட்ரோ ரயில்களை உருவாக்க திட்டம்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும் வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் நம்பகமான, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்துக்கு தினமும், காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை 42 ரயில்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் 15 பெண்கள் உள்பட 180 டிரைவர்கள் பணி செய்கின்றனர்.

இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதற்கான திட்டப்பணிகள் அனைத்தும் வருகிற 2026 -ம் ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், புதிதாக அமையவுள்ள மூன்று வழித்தடங்களிலும் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் டிரைவர் இல்லாமல், தானியங்கி முறையில் ரயிலை இயக்கும் வகையில் ரயில் பெட்டிகளை வடிவமைக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

Updated On: 22 Sep 2022 10:09 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  3. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  4. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  6. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  7. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  9. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  10. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?