/* */

உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும்: உலக மீனவர் தினத்தில் கோரிக்கை

சாலையே இல்லாமல் மீனவர்கள் மீது சாலை வரி, பசுமை வரி, கலால் வரி மதிப்பு கூட்டப்பட்ட அனைத்து வரிகளும் விதிக்கப்படுகிறது

HIGHLIGHTS

உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும்:   உலக மீனவர் தினத்தில்  கோரிக்கை
X

உலக மீனவர் தின நாளில் காசிமேடு மீனவ சங்கத்தினர் கோரிக்கை முழக்கமிட்டனர்

சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவில் உள்ள அகில இந்திய மீனவர் சங்க அலுவலகத்தில் உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது.

இதில் பங்கேற்ற அகில இந்திய மீனவர் சங்க தேசிய செயல் தலைவரும், தேசிய செய்தி தொடர்பாளருமான நாஞ்சில் ரவி அளித்த பேட்டியில் கூறியதாவது,

இன்று கொடியேற்றி உலக மீனவர் தினவிழாவை கொண்டாடியுள்ளோம். இந்நேரத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அரசுக்கு நாங்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளோம். வேளாண் மசோதாவை எப்படி மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதோ, அதேபோல் மீன்வள மசோதா 2021 ஐ ரத்து செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் சாலையே இல்லாமல் மீனவர்கள் மீது சாலை வரி, பசுமை வரி, கலால் வரி மதிப்பு கூட்டப்பட்ட அனைத்து வரிகளும் மீன்வர்களுக்கு விதிக்கப்படுகிறது. ஆண்டிற்கு 70 ஆயிரம் கோடி அந்நியசெலாவணி ஈட்டி தரும் மீனவர்களுக்கு அனைத்து வரிகளையும் ரத்து செய்து உற்பத்தி விலையில் மீன்பிடி தொழிலுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்பிடி தொழில் தற்போது ஐசியுவில் உள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் அது தற்போது செயல்பட்டு வருகிறது. இதே நிலைமை தொடர்ந்தால், கோமாவிற்கு சென்றுவிடும் நிலையில் தான் மீன்பிடி தொழில் உள்ளது. எனவே அரசு அனைத்து வரிகளையும் ரத்து செய்து டீசல் மாநியத்தை வழங்க வேண்டும்.

காசிமேடு மீன்பிடி துறைமுகம் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் சாதாரணமாக 800 படகுகள் கட்ட வேண்டிய இடத்தில் 2 ஆயிரம் படகுகள் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் ஆண்டுக்கு 100 படகுகள் வரை சேதமடைந்து விடுகின்றன. மேலும் கடந்த ஆட்சியில் மழை காலங்களில் சேதமடைந்த படகுகளுக்கு ரூ.5 லட்சம் மாநியம் அரசு வழங்கியது. தற்போது அதனை ரூ.10 லட்சமாக மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய மீனவ சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு