/* */

பயிரை மேயும் வேலிகள்...! காம காட்டேரிகளாகும் ஆசிரியர்கள்...!! தீர்வுதான் என்ன?

சென்னையில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதற்கு நிலையான தீர்வு பிறக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

HIGHLIGHTS

பயிரை மேயும் வேலிகள்...! காம காட்டேரிகளாகும் ஆசிரியர்கள்...!! தீர்வுதான் என்ன?
X

மாதா... பிதா... குரு... தெய்வம்... என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். மாதா (தாய்) என்பவள் எல்லாவற்றுக்கும் அடிப்படையானவள். அதனால் முதலில் வைத்துள்ளனர். பிதா (தந்தை), அவர் இல்லாமல் இந்த உலகத்திற்கு நாம் வந்திருக்க முடியாது. அவரது அறிவுரைகள் நம் வாழ்வின் தாரக மந்திரமாக இருக்கும். எனவே இரண்டாம் இடத்தில் வைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக நம் முன்னோர்கள் கொடுத்துள்ள இடம், பாடம் கற்றுத்தரும் குருவுக்கானது.

ஆசிரியர்களின் அர்பணிப்பு...

வயிற்றுப்பசியை தாய், தந்தை போக்கினாலும், அறிவுப்பசியை போக்குவது குரு. பல திறமைகளை நாம் கற்று அறிய ஊன்றுகோளாக விளங்குவது குருதான். எனவே தான் குருவை 3ம் இடத்தில் வைத்துள்ளனர். கடவுளை கூட கடைசியாகத்தான் வைத்துள்ளனர். எனவே குருஸ்தானம் மிகவும்உயர்ந்த இடம்.

நான் கலெக்டராக இருக்கிறேன். டாக்டராக இருக்கிறேன்... என்ஜினியராக இருக்கிறேன்.. வெளிநாட்டில் வேலை செய்கிறேன்.. சொந்தமாக பெரிய நிறுவனம் நடத்தி வருகிறேன். பெரிய பணக்காரனாக இருக்கிறேன். இதற்கு எல்லாம் காரணம் எனது ஆசிரியர்கள்தான் என்று, தன்னிடம் படித்த மாணவர்கள் கூறுவதை கேட்டு ஆனந்தப்படுபவர்கள் தான் ஆசிரியர்கள். அவர்களின் இந்த ஆனந்தத்திற்கு விலை மதிப்பே கிடையாது.

பசுத்தோல் போத்திய புலிகளாக...

இப்படிப்பட்ட நல்ல நல்ல ஆசிரியர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு நடுவே புல்லுருவிகளாக ஆசிரியர்களின் பெயரை கெடுப்பதற்காகவே இச்சை புத்தி கொண்ட ஆசிரியர்கள், பசுத்தோல் போத்திய புலிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது மனம் வேதனைப்படக்கூடிய விஷயம். கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல், சென்னையில் ஆசிரியர்களின் காம லீலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத் தொடங்கியுள்ளன. அதுவும் கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் பாடம் எடுக்கும் ஆசிரியர் செய்த லீலைதான் தொடக்கம்.

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்.

சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பள்ளி பத்ம சேஷாத்ரி பள்ளி ஆகும். இங்கு 11, 12ம் வகுப்பு மாணர்களுக்கு வணிகவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் ராஜகோபாலன். நங்கல்லூர் இந்து காலனி 7வது தெருவில் வசித்து வருகிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வணிகவியல் பாடத்தை ராஜகோபாலன் நடத்தினார். அதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அந்த வகுப்பில் அவர் அறைகுறை ஆடையுடன் தோன்றினார். இது மாணவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இங்குதான் விஷயமே தொடங்கியது. இவர் மீது அடுக்கடுக்காய் புகார்கள் எழுந்தன.

ஆன்லைன் படிக்கும் மாணவிகளின் செல்போன் நம்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், அவரது உடை, உடல் பற்றிய குறிப்புகளை முதலில் அனுப்புவாராம். இதற்கு மாணவிகள் ஆட்சேபம் தெரிவித்தால், வேறு ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக தங்களுக்கு வந்துவிட்டது என்று மற்றொரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு மற்றொரு மாணவிக்கு இதுபோல் குறுந்தகவலை அனுப்பி காமவலையில் சிக்க வைப்பாராம்.

கூட்டாளியும் சிக்கினார்...

ராஜகோபாலனின் இதுபோன்ற அந்தரங்க லீலைகளை பொறுத்துக்கொள்ளாமல் பொங்கியெழுந்த ஒரு மாணவி, முன்னாள் மாணவியிடம் இதுபற்றி கூறியுள்ளார். மாடலிங் துறையில் உள்ள அந்த மாணவி, சமூக வலைதளங்களில் படிவிட்டுள்ளார். அதன் பிறகுதான் இந்த விவகாரம் பெரிதாக தொடங்கியுள்ளது. 5 பெண்கள் இதுவரை அவர் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் விஷ்வரூபம் எடுக்க... போலீசார் மாணவிகளிடம் காவல்துறை உதவி எண் கொடுத்தனர். இதில் புகார் அளித்தால் அவர்களது விவரம், பெயர், ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்துவிட்டனர். இதனால் அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு ஆசிரியர் சிக்கினார்.

தடகள பயிற்சியாளர் - கராத்தே மாஸ்டர்

தமிழ்நாடு பிரைம் ஸ்போட்ஸ் அகாடமி என்ற பெயரில் சென்னை பாரிமுனையில் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வரும் நாகராஜன், மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பயம்காட்டி மாணவிகளை பாலியல் ரீதியாக பணிய வைப்பதாகவும் சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது.

கராத்தே மாஸ்டன் கெவின், தடகள பயிற்சியாளர் நாகராஜன்.

இதையடுத்து 19 வயது இளம் பெண் ஒருவர், தன்னை பல ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு செய்ததுடன், குடுபத்திறகும் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் செய்தார். இதையடுத்து இவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் மீது தற்போது வரை 7 மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இன்னும் எத்தனை பேரோ தெரியவில்லை.

அதேபோல் சென்னை அண்ணாநகரில் உள்ள பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளி கராத்தே மாஸ்டன் கெவினும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமானது. இப்பள்ளியும் பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மற்றொரு பள்ளியாகும்.

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன்.

இதையடுத்து சென்னை அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வணிகவியல் துறையில் 11, 12ம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் ஆனந்தன் என்கிற மற்றொரு ஆசிரியர் மீதும் மாணவிகள் புகாரை பதிவு செய்தனர். எனவே இன்னும் இதுபோல் எத்தனைபேர் உள்ளனர் என்று போலீசார் தோண்ட தொடங்கியுள்ளனர்.

கடவுள் பெயரை கூறி அத்துமீறல்...

இதுமட்டுமா...? சென்னையை அடுத்த புதுப்பாக்கத்தில் செயல்படுகிறது சுசில் ஹரி பள்ளி. இதன் நிறுவனர் சிவ சங்கர் பாபா. இவர் மீதுதான் தற்போது மாணவி ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மற்றவற்றைவிட மிகவும் கொடுமையானது.

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் அதிகாரிகள் சுனில் ஹரி பள்ளியில் விசாரணை

அந்த மாணவி சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவலில், அவர் அந்த மாணவியை பாலியல் இச்சைக்கு அடிபணிய வைத்தாகவும், தான் மறுத்தபோது இறைவன் கிருஷ்ணா என்று கூறி அழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுமிகளுக்கு விலை உயர்ந்த மதுபானங்களை கொடுத்து குழுவாக பாலியல் உறவில் ஈடுபட்டதை நான் பார்த்துள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடவுள் பெயரில் மாணவிகளை பாலியல் உறவுக்கு தூண்டுவார் என்றும் பதிவிட்டிருக்கிறார். இதேபோல், சென்னை அடையாறு பகுதியில் உள்ள கேந்திரிய வித்யா பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இப்படி தலைநகர் சென்னையில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இது மாணவிகளின் படிப்பில் சிறந்து விளங்குவதிலும், விளையாட்டில் சிறந்து விளங்குவதையும் தடுக்கிறது. ஆசியர்களின் இச்சைக்கு இடம் கொடுத்தால் மட்டும்தான் தன்னால் படிப்பில் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல முடியுமா? தடகள போட்டிகளில், விளையாட்டுகளில் ஜெயிக்க முடியுமா? என்கிற மனநிலைக்கு தள்ளப்படும் மாணவிகள் தள்ளப்படுகின்றனர்.

பெற்றோரின் கலக்கம்...

பெற்ற பிள்ளைகளை கண்களுக்கும் வைத்து பாதுகாக்கும் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தையும், ஆசிரியர்களையும் நம்பித்தான் பள்ளிக்கும், விளையாட்டு பயிற்சிக்கும் அனுப்புகின்றனர். ஆனால் வேலியே பயிரை மேய்ந்ததுபோல் மாணவிகளின் வாழ்க்கையை ஆசிரியர்களே அழிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு சில ஆசிரியர்களும் உடந்தை போகும் அவலமும் ஏற்படுவது மிகவும் வேதனையான ஒரு விஷயம். எனவே இந்த விவகாரத்தை அரசு சாதாரணமாக கருதி, விசாரணை கமிஷன், கண்காணிப்பு குழு என்று அமைத்து அப்படியே விட்டுவிடாமல் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்.


மூன்றாம் கண் வேண்டும்...

சிசிடிவி கேமராக்கள் போலீசாருக்கு மிகவும் முக்கியமான ஆதார கருவியாக உள்ளது. இதை பள்ளிகளின் ஒவ்வொரு அறையிலும் பொருத்த வேண்டும். மாணவிகளுக்கு விளையாட்டு கற்பிக்கும் இடமாகட்டும், கிரவுண்டாகட்டும் கண்டிப்பாக அங்கு சிசிடிவி கேமரா பொருத்துவதை உறுதி செய்ய அரசு கட்டளை இட வேண்டும். இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மாணவிகள் நிம்மதியாக படித்து நாளைய சிறந்த சமுதாயமாக திகழ்வார்கள். அரசு இதற்கு உடனடியாக செவிசாய்க்க வேண்டும் என்பதே பெற்றோர்கள், சமூக ஆர்வர்களின் ஆவலாக உள்ளது.

Updated On: 4 Jun 2021 2:11 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்