/* */

விமானத்தில் கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தது

தமிழகத்திற்கு மேலும் 4,80,380 டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 41 பாா்சல்களில் இன்று மாலை விமானத்தில் புனேவிலிருந்து சென்னைக்கு வந்தடைந்தன.

HIGHLIGHTS

விமானத்தில் கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தது
X

சென்னை விமான நிலையத்திற்கு வந்த கொரோனா தடுப்பூசி டோஸ்கள்

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

பொதுமக்களும் ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.இதனால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன

தமிழ்நாடு அரசே மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி,நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்கின்றன.அந்த விதத்தில் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவழைக்கப்படுகின்றன.

என்னும் நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு புனேவிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 4,80,380 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 41 பாா்சல்களில் 48,038 மருந்து பாட்டில்கள் சென்னை பழைய விமானநிலையம் வந்தடைந்தன.

விமானநிலைய லோடா்கள் அந்த தடுப்பூசிகள் அடங்கிய பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா்.அதன்பின்பு தடுப்பூசிகள் அடங்கிய பாா்சல்களை தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் விமானநிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி,சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா்.

அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

நேற்று ஒரே நாளில் தமிழகத்திற்கு 4,36,000 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன.இந்நிலையில் இன்று மேலும் 4,80,380 தடுப்பூசிகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 Jun 2021 4:37 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்