/* */

தமிழக அமைச்சர்கள் 4 நாட்களாவது கோட்டைக்கு வரணும் :முதல்வர் அதிரடி உத்தரவு

cm strict instruction to state ministers தமிழகத்தில் உள்ள மாநில அமைச்சர்கள் அவரவர்களின் துறைக்கான பணிகளைக் கவனிக்க வாரத்தில் 4 நாட்கள் கோட்டைக்கு வரவேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

தமிழக அமைச்சர்கள் 4 நாட்களாவது கோட்டைக்கு வரணும் :முதல்வர் அதிரடி உத்தரவு
X

தமிழக முதல்வர்  ஸ்டாலின் 


cm strict instruction to state ministers



தமிழக அரசின் தலைமைச் செயலகம் (கோப்புப் படம்)

cm strict instruction to state ministers

தமிழக அமைச்சர்கள் அனைவருமே வாரத்தில் 4 நாட்கள் தொடர்ந்து கோட்டைக்கு வரவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அவர் பதவியேற்றது முதலே பல நெருக்கடிகளை இந்த ஆட்சியானது சந்தித்து வருகிறது. எதிர்க்கட்சிகள், மற்றும் கவர்னர் என பல பிரச்னைகளை சந்தித்து வந்தாலும் அவ்வப்போது தனது தலைமையில் தலைமைச்செயலகத்தில் சட்டசபையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து அறியவும், துறை சார்ந்த செயல் மற்றும் அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வுக்கூட்டத்தினை நடத்தி வருகின்றார். இதுபோன்ற முக்கிய கூட்டங்களுக்கு மட்டும் அமைச்சர்கள் கலந்துகொள்வதாகவும் மற்ற நாட்களில் கோட்டைக்கு அமைச்சர்கள் சரிவர வராததால் கோப்புகள் கையெழுத்திடப்படாமல் தேக்கநிலை அடைவதாகவும் புகார்கள் முதல்வருக்கு சென்றன.

cm strict instruction to state ministers

இந்த புகாரினைத் தொடர்ந்து அமைச்சர்கள் தொடர்ந்து தலைமைச்செயலகத்திற்கு வருகின்றனரா என்பதை முதல்வர் ஸ்டாலின் கண்காணிக்கத் துவங்கியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென முதல்வர் ஆபீசிலிருந்து அமைச்சர்களின் அறைகளுக்கு தொடர்பு கொண்டு அமைச்சர்கள் வந்துள்ளனரா எனக் கேட்டுள்ளனர். அப்போது ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே தலைமைச்செயலகத்தில் தங்கள் கேபினில்இருந்துள்ளனர். இந்த செய்தி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, திடீரென உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அதாவது இனி வாரத்தில் நான்கு நாட்கள் அதாவது திங்கள் முதல் வியாழன் வரை அனைத்து அமைச்சர்களும் தலைமைச்செயலகம் வந்து தங்கள் பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது முதல்வரே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதால்இதுநாள் வரை சரிவர கோட்டைக்கு வராத அமைச்சர்கள் அனைவரும் இனி கட்டாயம் ஆஜராகிவிடுவார்கள் .

cm strict instruction to state ministers

அமைச்சரவை மாற்றம்

தீபாவளிக்கு முன்பிருந்தே ஒரு சில அமைச்சர்களின் பணி சரியில்லை என்ற அதிருப்தி முதல்வர் மனதில் எழுந்தது. இருந்த போதிலும் யார்? யார்? அந்த லிஸ்டில் இருந்தனரோ அவர்களை நேரில் அழைத்து வார்னிங் கொடுத்துள்ளதாகவும் பேசிக்கொள்கின்றனர். தற்போது அவர்களுடைய ஆபீசுக்கே சரிவர வருவதில்லை என்ற கூடுதல் தகவலும் போய்விட்டால் எந்த நேரத்திலும் அமைச்சரவை மாற்றம் நடந்துவிடும் என்ற கிலியும் அனைத்து அமைச்சர்களிடமும் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் இனி ஒழுங்காக கோட்டைக்கு சென்று அவர்களுடைய வேலையை சரிவர பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

cm strict instruction to state ministers

ஏற்கனவே கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட பலரும் மனு செய்திருந்தனர். ஆனால் ஐபேக் டீம் முன்மொழிந்தவர்கள் மற்றும் செலவு செய்ய தயாராக உள்ளவர்கள் என பல கட்ட ஆய்வுக்கு பின் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தனர். இதில் பல முரண்பாடுகள் இருப்பதாக பல ஆண்டுகளாக திமுகவில் உறுப்பினராக உள்ளவர்கள் அப்போதே போர்க்கொடி துாக்கினர். கட்சிக்கு கடுமையாக உழைத்தவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு தராமல் மாற்றுக்கட்சியில்இருந்து வந்தவர்கள், மற்றும் மக்கள் பலம் இல்லாதவர்களுக்கு சீட் அளிக்கப்பட்டதாகவும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புகார்கள் அப்போது வந்தன. ஆனால் அதனைக்கண்டுகொள்ளாமல் கட்சித்தலைமை எடுத்த முடிவின்படியே சீட் ஒதுக்கப்பட்டது. இதில் பல பேருக்கு மனவருத்தம் இருந்ததால் அவரவர் மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள் மேல் எதிர்கோஷ்டியினர் கடுமையான புகாரைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கோட்டைக்கு வரவில்லை என்று முதல்வரும் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளதால் இனி அமைச்சர்கள் கண்காணிப்பு வளைத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

Updated On: 12 Nov 2022 8:42 AM GMT

Related News