/* */

40 பார்களை டெண்டர் எடுக்க முயன்ற ஒரே நபர்; வைரலாகும் வீடியோ

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 பார்களை ஒரே நபர் டெண்டர் எடுக்க முயன்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு மீண்டும் என்ன பதில் சொல்லப்போகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

HIGHLIGHTS

40 பார்களை டெண்டர் எடுக்க முயன்ற ஒரே நபர்; வைரலாகும் வீடியோ
X

திருவள்ளூர் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் ஒரே நபர் நாற்பது பார்களுக்கான டெண்டர் பாம்களை பூர்த்தி செய்து நேரம் முடிந்து பெட்டில் போடும் காட்சி

தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை அதிமுக ஆட்சியில் விண்ணப்பித்ததை விட 5 ஆயிரத்து 315 பேர் கூடுதலாக இந்த முறை விண்ணப்பித்து இருப்பதாக நேற்று சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 பார்களுக்கு ஒரே நபர் டெண்டர் எடுக்க பாக்ஸ் ஒன்றில் மனுக்களை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறத

தமிழகத்தில் மின்சாரத்துறை மது மற்றும் ஆயத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவினாலும், கரூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு நம்பிக்கையான நபராகவே இருப்பதால் கோவை மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.

இவர் மீது ஏற்கனவே, அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு நடந்ததாகக் கூறி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுைகயிட்டு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, தன் மீதான புகாருக்கு விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, டெண்டர் வழங்க வந்த யாரையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. எந்த அரசியல் கட்சிக்கும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. யாரெல்லாம் முறையாக படிவங்களை அனுப்பி உள்ளார்களோ அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆன்லைனிலும், நேரிலும் முறையாக டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றசாட்டை மறுத்தார்.

இந்த நிலையில், டாஸ்மாக் பார்களை டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்ததை நிரூபிக்கும் விதமாக, திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், டெண்டர் விடுவதற்கான நேரம் முடிந்த பிறகும், போலீஸ் பாதுகாப்புடன் ஒரு பையை எடுத்து வந்த நபர் ஒருவர், ஒட்டுமொத்தமாக 40 பார்களுக்கான டெண்டர் விண்ணப்பங்களையும், பெட்டிக்குள் போடுகிறார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், அந்த நபரிடம் இருந்து ஏராளமான விண்ணப்பங்களை பறிமுதல் செய்த சக ஒப்பந்ததாரர்கள், காக்களூரில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், புதிதாக டெண்டரை எடுக்க வந்தவர்களுக்கும் விண்ணப்பத்தை வழங்க மறுத்த அதிகாரி, ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும், சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, கைகளில் விண்ணப்பங்களை கொடுத்து அனுப்புவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

பார் டெண்டர் விடுவதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியவரும் நிலையில், தற்போது வெளியான வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்க அளிப்பார்களா என்று பார் உரிமையாளர் மட்டும் தமிழக மக்களிடன் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

Updated On: 4 Jan 2022 7:05 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  3. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  4. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  7. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  8. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!