/* */

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

இந்த உண்ணாவிரதப் போராட்டம் புதிதாக அரசாணை கேட்டு அல்ல, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டித்தான்

HIGHLIGHTS

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
X

சென்னை எழும்பூர் ராஜரெத்னம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட  தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர்

முதலமைச்சர் வெளியிட்ட அரசாணையை அமல் படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் சென்னையில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோரிக்கைகள்:

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து ஊதிய உயர்வு கோரிக்கையை முன்னெடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின், உயர்நீதி மன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, தமிழக அரசின் நிதித்துறையால்2020ல் ஒருஉயர்மட்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் பரிந்துரையின் பெயரில் அரசாணை 293 வெளியிடப்பட்டது.

சென்ற அரசில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு தீர்வும் கிட்டாத நிலையில், இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற ஒரே மாதத்திலேயே மருத்துவர்களுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு பயன் தரும் வகையில் அரசாணை 293ஐ அறிவித்தார். 2021 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று வழங்கப்பட்ட இவ்வாணை இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. ஒரு சில மருத்துவர்களின் எதிர்ப்பினால் இந்த அரசாணை 293 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை செயல்படுத்தப்படாததால் அரசு மருத்துவர்களுக்கு சுமார் 75 ஆயிரம் முதல் நான்கு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் துறை இயக்குனர்களுக்கு உத்தரவிட்டால் ஒரே நாளில் மருத்துவர்கள் அனைவருக்கும் நிலுவையில் உள்ள பணப்பயன்கள் கிடைத்து விடும். அமைச்சர் சில மருத்துவர்கள் இந்த அரசாணையை வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்றும் நீங்கள் வேண்டுமென்று கூறுகிறீர்கள் என்றும் ஆகையால் இதை உங்கள் ஒற்றுமையின் மையால் நிறுத்தி வைத்திருக்கிறேன் என்றும் கூறுகிறார். இதை பல ஊடக சந்திப்பிலும் அவர்கூறியுள்ளார்கள். ஆனால் இந்த அரசாணை வேண்டும் என்பவர்கள் வாங்கிக் கொள்ளட்டும் வேண்டாம் என்பவர்கள் வாங்காத இருக்கட்டும் என்று நமது சங்கம் கூறிய கருத்தினை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அதை நடைமுறைப்படுத்துவதாக 27 பிப்ரவரி அன்று நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டார்கள். ஆனால் இதுவரை அவை நடைமுறைப்படுத்தவில்லை

முதல்வர் வழங்கிய வருடத்திற்கு சுமார் 200 கோடி ரூபாயும் பணப்பயன்கள் கிடைக்கக்கூடிய, இந்த சிறப்புமிகு அரசாணையை அமல்படுத்தாமல் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் நிறுத்தி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன வென்றும் தெரியவில்லை.பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு தான் வேறு வழி இல்லாமல் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் இந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அரசாணை 293ஐ அமுல்படுத்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் உடனடியாக உத்தரவிட வேண்டும். அரசாணை 293 அமுல்படுத்த படாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டங்களாக, மார்ச் 29 ஆம் தேதி அன்று அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அரசுமருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புற நோயாளிகள் பிரிவுபுறக்கணிப்பு போராட்டமும் அதன் பிறகும் இந்த அரசாணை அமல்படுத்தப்படாவிட்டால் ஏப்ரல் ஐந்தாம் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்கும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.

இந்த அரசாணை எதிர்பார்த்து (18.06.2021) முதல் சுமார் 16 ஆயிரம் அரசு மருத்துவர்கள்காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருக்கும் சுமார் 75,000 முதல் 4 லட்சம் ரூபாய் வரை வரவேண்டிய தொகை நிலுவையில் உள்ளது. பலமுறை தமிழக அமைச்சர் மற்றும் முதன்மை செயலர் ஆகியோரிடம்ம் கோரிக்கை வைத்தும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது இந்த அரசாணையை நடைமுறைப்படுத்த தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வியாழக்கிழமை 23 மார்ச் 2023 அன்று சென்னை ராஜரத்தினம் ஸ்டேடிய வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் கே.செந்தில் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் எம் ரவிசங்கர் முன்னிலையில் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் சுமார் 500 பேர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக முதல்வர் பதவியேற்ற பிறகு மருத்துவர்களுக்கு முதன் முதலில் வழங்கியது அரசாணை 293 தான். முதல்வரால் வழங்கப்பட்ட இத்தகைய சிறப்பு மிகுந்த அரசாணையை நிறுத்தி வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல. தமிழக வரலாற்றில் இதுபோன்று முதல்வர் வழங்கிய அரசாணையை இதுவரை என்றுமே நிறுத்தியது இல்லை. இங்கே இப்பொழுது தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் நடத்திக் கொண்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் புதிதாக அரசாணை கேட்டு அல்ல, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டித்தான் என்றனர்


Updated On: 23 March 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  4. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  5. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  9. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?