/* */

சென்னையில் போகி புகை மற்றும் பனி மூட்டம்: விமான சேவையில் பாதிப்பில்லை

போகி புகை மற்றும் பனி மூட்டத்தால் இன்று சென்னை விமான நிலையத்தில் விமான சேவையின் எந்த ஒரு பாதிக்கப்படவில்லை.

HIGHLIGHTS

சென்னையில் போகி புகை மற்றும் பனி மூட்டம்: விமான சேவையில் பாதிப்பில்லை
X

பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று தமிழகமெங்கும் போகி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகைக்காக பழைய பொருட்களை எரிப்பது வாடிக்கை. ஆனால் ஒரு சிலர் பழைய டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை எரித்து போகி கொண்டாடுகின்றனர். இதனால் காற்றில் மாசு கலந்தது பல்வேறு பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன. இதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள் ஏற்படுத்துகின்றன.

எனினும், இன்று சென்னையில் வழக்கம் போல் போகி பண்டிகையின் போது பலரும், பழைய டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்தனர். இதனால் வெளிப்பட்ட புகை, காற்றில் கலந்தது. அத்துடன், மார்கழி பனி மூட்டமும் இருந்தது. அதிகாலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் புகைபோல் சூழ்ந்து காணப்பட்டது. வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே காலை ஏழு மணிவரை வாகனங்களை ஓட்டி சென்றனர்.

வழக்கமாக, போகி புகையுடன் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு, சென்னையில் பல விமான சேவைகள் புறப்படுவதிலும் தறையிரங்குவதிலும் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்தாண்டு, அவ்வாறு நிகழவில்லை. இன்று சென்னை விமான நிலையத்தில் எந்த ஒரு விமான சேவையும் பாதிப்பு ஏற்படாமல் தொடர்ந்து இயங்கியது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு