/* */

சென்னை: பொதுமக்களுக்கு நேரடியாக முகக்கவசம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 10-க்கு மேற்பட்ட இடங்களில். 2 முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

சென்னை: பொதுமக்களுக்கு நேரடியாக முகக்கவசம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
X

கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக,  சென்னை மாநகரின் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று, பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி, விழிப்புணர்வை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தினார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று சென்னையில் பல்வேறு இடங்களில், நேரடியாக மக்களுக்கு ஓமந்துாரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பேருந்து நிலையம், ரிச்சி தெரு அருகில், காஸ்மொபோலிடன் கிளப் அருகில், ஸ்பென்சர் பிளாசா எதிரில், ஆயிரம் விளக்குப் பகுதி, சேப்பாக்கம், தேனாம்பேட்டை சித்தி விநாயகர் கோயில் தெரு, எல்டாம்ஸ் சாலை சிக்னல், எஸ்.ஐ.இ.டி. கல்லுாரி பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கும் நேரில் சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் முகக்கவசங்களை வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது பொதுமக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார். பொதுமக்களும் அரசு எடுத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

Updated On: 4 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்