/* */

ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்றவர்கள் கைது-போக்குவரத்து காவல்துறை

ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை போக்குவரத்து காவல்துறை

HIGHLIGHTS

ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்றவர்கள் கைது-போக்குவரத்து காவல்துறை
X

ரேஸ், சாகசத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

சட்டத்திற்குப் புறம்பாக பைக் ரேஸ்களில் ஈடுபடுவர்கள்மீது காவல் துறை தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. வார இறுதி நாட்களில் பைக் சாகசங்கள், பைக் ரேஸ்கள் உள்ளிட்டவை அதிகளவில் நடைபெற்று வருவதைத் தடுக்க சென்னை காவல்துறை அதிக கவனம் எடுத்து சிறப்பு தணிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகளை விற்பனை செய்யும் கடைகளாக அடையாளம் காட்டப்பட்ட கடைகளில் தணிக்கை செய்த காவல்துறையினர் அங்கு 32 ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகளைக் கண்டறிந்தனர். அவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் பிரவீன் குமார், சரத்குமார் ஆகிய இருவரை தற்போது கைது செய்துள்ளனர். அண்ணா சாலையில் இருக்கும் 'சென்னை பைக்கர்ஸ்' மற்றும் ஆலந்தூர் 'நியூமெகா ஸ்டிக்கர்ஸ்' கடை உரிமையாளர்கள் இவர்கள். இருவரும் கைதுக்கு பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடத்திற்கு மேலாக தண்டனை வழங்கப்படும்.

சில நாட்களுக்கு முன்பு பைக் ரேஸ்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வீடியோக்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து இப்படியான சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Updated On: 28 April 2022 9:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  2. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  4. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  5. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  8. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  9. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  10. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!