/* */

கோவில்களுக்கு செல்போன் எடுத்து செல்ல தடை:மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி

cell phone restricted to temples in tamilnadu தமிழக கோயில்களில் வழிபாட்டிற்காக செல்லும் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடைவிதிக்க வேண்டும் என அறநிலையத்துறை கமிஷனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கோவில்களுக்கு செல்போன் எடுத்து செல்ல தடை:மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி
X

மதுரை  ஐகோர்ட் கிளையின் படம் (கோப்பு படம்)

cell phone restricted to temples in tamilnadu

திருச்செந்துார் கோயிலிின் படம் (கோப்பு படம்)

cell phone restricted to temples in tamilnadu

தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களில் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கவும், வழிபாடுகளுக்கு வரும் பக்தர்கள் நம் மாநில கலாச்சார உடையில் வருகின்றனரா என்பதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கையினை இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

திருச்செந்துார் சுப்பிரமணிய ஸ்வாமி கோயிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என அர்ச்சகர் சீதாராமன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில்,

தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களில் உள்ள சிலைகளின் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களால் போட்டோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சில கோயில்களில் சிலை திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

திருச்செந்துார் கோயி்லில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பலர் செல்போன்களைப் பயன்படுத்தி சுவாமி அபிஷேகம், மற்றும் அங்குள்ள சிலைகள் முன் நின்று செல்பி எடுத்து தடை செய்யப்பட்ட செயல்களில் அத்து மீறி வருகின்றனர்.

எனவே திருச்செந்துார் கோயிலுக்கு வருவோர் செல்போன் உள்ளே எடுத்து வர தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அப்போது திருச்செந்துார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலினுள் செல்போன் எடுத்து வர கோயில் நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கினை தள்ளி வைத்தனர்.

மேலும் இந்த வழக்கானது நேற்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது திருச்செந்துார் கோயிலின் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சார்பில் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்விவரம் வருமாறு,

கடந்த மாதம் நவம்பர் 14 ந்தேதி முதல் கோயில் பணியாளர்கள் உட்பட அனைவரும் கோயிலுக்குள் 15 இடங்களுக்கு செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பாதுகாக்கும் வகையில் டோக்கன்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையும் மீறி யாராவது செல்போனை கோயிலுக்குள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் சுவாமியைத் தரிசனம் செய்ய கோயிலுக்கு வரும் பக்தர்கள் மரபைக் காக்கும் வகையில் உடையணிந்து வரவேண்டும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. பாதுகாவலர் நியமனம் செய்ய எஸ்.பிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cell phone restricted to temples in tamilnadu

வழக்கை விசாரித்த தீர்ப்பு வழங்கிய மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணபிரசாத்(கோப்பு படம்)

cell phone restricted to temples in tamilnadu

இதற்கு பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழக கோயில்களின் புனிதத்தன்மையைக் காக்கவும், துாய்மையை கடைப்பிடிக்கும் வகையில் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடைவிதிப்பது, மற்றும் பக்தர்கள் கலாச்சார உடையணிந்து வருவதை உறுதிப்படுத்தும் உத்தரவினை இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அமல்படுத்தவேண்டும் என நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.

இதனையடுத்து திருச்செந்துார் கோயில் மட்டுமின்றி, இந்த நடைமுறையானது தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் பயன்பாட்டுக்கு வர உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

cell phone restricted to temples in tamilnadu

தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கவும், வழிபாடுகளுக்கு வரும் பக்தர்கள் நம் மாநில கலாச்சார உடையில் வருகின்றனரா என்பதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கையினை இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

திருச்செந்துார் சுப்பிரமணிய ஸ்வாமி கோயிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என அர்ச்சகர் சீதாராமன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில்,

தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களில் உள்ள சிலைகளின் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களால் போட்டோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சில கோயில்களில் சிலை திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.திருச்செந்துார் கோயி்லில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பலர் செல்போன்களைப் பயன்படுத்தி சுவாமி அபிஷேகம், மற்றும் அங்குள்ள சிலைகள் முன் நின்று செல்பி எடுத்து தடை செய்யப்பட்ட செயல்களில் அத்து மீறி வருகின்றனர்.

எனவே திருச்செந்துார் கோயிலுக்கு வருவோர் செல்போன் உள்ளே எடுத்து வர தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.ஏற்கனவே இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அப்போது திருச்செந்துார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலினுள் செல்போன் எடுத்து வர கோயில் நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கினை தள்ளி வைத்தனர்.

மேலும் இந்த வழக்கானது நேற்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அப்போது திருச்செந்துார் கோயிலின் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சார்பில் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்விவரம் வருமாறு,

கடந்த மாதம் நவம்பர் 14 ந்தேதி முதல் கோயில் பணியாளர்கள் உட்பட அனைவரும் கோயிலுக்குள் 15 இடங்களுக்கு செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பாதுகாக்கும் வகையில் டோக்கன்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையும் மீறி யாராவது செல்போனை கோயிலுக்குள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் சுவாமியைத் தரிசனம் செய்ய கோயிலுக்கு வரும் பக்தர்கள் மரபைக் காக்கும் வகையில் உடையணிந்து வரவேண்டும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. பாதுகாவலர் நியமனம் செய்ய எஸ்.பிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழக கோயில்களின் புனிதத்தன்மையைக் காக்கவும், துாய்மையை கடைப்பிடிக்கும் வகையில் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடைவிதிப்பது, மற்றும் பக்தர்கள் கலாச்சார உடையணிந்து வருவதை உறுதிப்படுத்தும் உத்தரவினை இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அமல்படுத்தவேண்டும் என நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.

இதனையடுத்து திருச்செந்துார் கோயில் மட்டுமின்றி, இந்த நடைமுறையானது தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் பயன்பாட்டுக்கு வர உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Updated On: 5 Dec 2022 4:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?