/* */

தமிழக கல்வித்துறை நடவடிக்கையில் மாற்றம் வருமா? மனஉளைச்சலில் சிக்கித்தவிக்கும் ஆசிரியர்கள் பகுதி-1

any change in school of education, teachers depressed? ஆசிரியர் பணி என்பது அறப்பணி என்று சொன்னார்கள். அது உண்மையாகிவிட்டது. 24 மணிநேரமும் இப்போதுள்ள ஆசிரியர்கள் சேவை செய்கிறார்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு.

HIGHLIGHTS

தமிழக கல்வித்துறை நடவடிக்கையில்  மாற்றம் வருமா?   மனஉளைச்சலில் சிக்கித்தவிக்கும் ஆசிரியர்கள்   பகுதி-1
X

அதிரடி அறிவிப்புகளால் நிலைகுலைந்து மனஉளைச்சலுக்குஆளான ஆசிரியர் (கோப்பு படம்)

any change in school of education, teachers depressed?

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினம் தினம் புதுப்புது அறிவிப்பால் அரசு ஆசிரியர்கள் பெரும் மன உளைச்சலில் சிக்கி தவித்துவருகின்றனர். முன்பெல்லாம் ஆசிரியர் என்றால் பாடம் நடத்துவது , தேர்வுத்தாள் திருத்துவது , என்ற வேலைகள் மட்டுந்தான் இருக்கும். ஆனால் இப்போதைய ஆசிரியர்கள் பாடம் நீங்கலாக, பல வேலைகளை தருவதால் மனஉளைச்சலில் சிக்கி தவித்துவருகின்றனர். ஒரு நாள் பள்ளிக்கு சென்றால் என்ன வேலை இருக்குமோ? என்ற பயத்தில்தான் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு பள்ளிக்கல்வித்துறையானது தினம் தினம் புதுப்புதுசாக தினுசு தினுசாக மெயில் அனுப்புவதால் சிக்கலில் சிக்கித்தவிக்கின்றனர். இதனால் மாணவ,மாணவிகளின் கற்பித்தல் பணி பெருமளவில் பாதிப்படைவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் பெற்ற தாய்க்கு பிறகு தந்தையும் அதன் பின் குருவையும் போற்றத்தக்கதாக இது காலம்வரை நாம் பின்பற்றி வருகிறோம். கல்வியை போதிக்கும் ஆசிரியரே குருவாக கருதப்படுகிறார். அந்த வகையில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக இடம் பெறும் குருவிற்குண்டான மதிப்பும் மரியாதைகளும் அக்காலம் போல் இக்காலத்தில் உள்ளனவா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

any change in school of education, teachers depressed?


அக்காலத்தில் குருவின் உபதேசமே கற்பித்தல் பணியாக இருந்தது. அதனை ஆர்வத்துடன் கேட்கும் சீடர்கள் (கோப்புபடம்)

any change in school of education, teachers depressed?

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு , அரசு உதவி பெறும் , மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவது நாளுக்கு நாள் தொடர்கதையாகிவருகிறது. கல்வி கற்பித்தல் என்பது அக்காலத்தில் குருகுலக் கல்வியில் துவங்கி பிறகு திண்ணைப் பள்ளிகளாக உருமாறி பின்னர் வகுப்பறைக்கல்வியாக படிப்படியாக நிலை மாறியது.

இருப்பினும் ஆரம்ப காலத்தில் குருகுலக்கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு கல்வியுடன் வாழ்க்கையின் நடைமுறைகள் செயல்பாடுகள் அனைத்துமே செயல்வழிக்கல்வியாகவே போதிக்கப்பட்டது. ஒழுக்கத்துடன் கூடிய கல்வி என்று கூட சொல்லலாம். குரு என்ன சொன்னாலும் அதனைத்தவறாமல் செய்யக்கூடிய மனப்பாங்கு அக்காலத்தில் குருகுலத்தில் பயின்ற மாணாக்கர்களிடையே இருந்தது. ஏனெனில் குருவுடனே தங்கி பயின்றதால் மாணவர்களின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணித்தார்.

any change in school of education, teachers depressed?


குருகுலப் பள்ளிகளுக்கு பின்னர் வந்ததுதான் திண்ணைப் பள்ளி... அக்கால அபூர்வ படம் (கோப்பு படம்)

any change in school of education, teachers depressed?

பின்னர் திண்ணைப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களிடையேயும் ஆசிரியர் மாணவர் உறவு என்பது நல்லமுறையில் இருந்து வந்தது. காலப்போக்கில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கவே வகுப்பறைகள் மூலம் கல்வி போதிக்க ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில் கல்வி பயின்றவர்கள் நம்முடைய ஆசானை குருவாக கருதி அவர்களுக்கு தேவையான அனைத்துவிஷயங்களிலும் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.

ஆனால் தற்போதோ ஆசிரியர், மாணவர்களிடையே உள்ள நட்புறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. காரணம் அக்காலத்தில் இருந்த பள்ளிக் கல்வித்துறையின் நடைமுறைகளும் தற்காலத்தில் உள்ளதற்கும் பெருமளவில் வித்தியாசம் உள்ளது. அக்காலத்தில நன்றாக கல்வி கற்காத மாணவர்களை ஆசிரியர்கள் அன்பாக அடித்து சொல்லிதிருத்தினர். இருந்த போதிலும் நன்றாக படிக்காத மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியர்களிடம் இவன் வீட்டில் படிப்பதே இல்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து அவனைப்படிக்க வையுங்கள் என சொல்லிவிட்டு சென்ற காலம் மலைஏறிப்போய் தற்போது கை வைக்காமல் வாயால் அறிவுரை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாத மனப்பக்குவத்தில் மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளார்.

any change in school of education, teachers depressed?


மேற்கண்ட இரண்டு பள்ளிகளுக்கு பின்னர் வந்ததுதான் வகுப்பறைக் கல்வி கற்றல் (கோப்பு படம்)

any change in school of education, teachers depressed?

இதற்கெல்லாம் காரணம் யார்? என்று ஆராய்வதை விடுத்து இது எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அனைவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம்.

கண்டிப்புகள் இருக்கக்கூடாதா?

அனைவரின் வாழ்க்கைக்கும் கல்வி தேவைதான். அந்த கல்வி பயிலும் இடத்தில் கண்டிப்புகள் இருக்கக்கூடாதா? இக்காலத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களிடம் கேட்டு பார்த்தால் மாணவ, மாணவிகளுக்கு புரியும். அவர்கள் அனைவருமே அக்கால ஆசிரியர்களால் குட்டு பெற்றவர்கள்தான். கண்டிப்பு என்றால் அப்படி இருக்கும். வாய்விட்டு சொல்லமுடியாது. ஆனால் இக்காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் அறிவுரை என்ற பெயரில் நாலு வார்த்தை பேசினாலே ஏதோ ஒரு விபரீதத்தினைத்தேடி அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக போய்விடுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியா?

பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பாட நேரத்தில் மட்டுமல்லாமல் ஒரு சில கல்லுாரிகளில் எப்போதுமே செல்போன் உள்ளிட்டவைகளை எடுத்துவரக்கூடாது என கட்டாயமாக அறிவிக்கப்படுகிறது.

இதனையும் மீறி ஒரு சிலர் இதனை வைத்துக்கொண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நேரத்தில் அதனை கவனிக்காமல் செல்போனில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் எந்த ஆசிரியருக்குத்தான் கோபம் வராது? இதனைத்தட்டிக் கேட்டால் தவறு என அந்த ஆசிரியர் திட்டிவிட்டார் என்று விபரீதத்தினை தேடிக்கொள்வதா? இது எந்த விதத்தில் நியாயம் ? தவறு செய்பவர்களை ஆசிரியர்கள் தட்டிக்கேட்க கூடாதா?

ஆசிரியர்களுக்கு ஆபீஸ் வேலை

தமிழகத்தில் பல பள்ளிகளில் அலுவலக வேலைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களையே தலைமையாசிரியர்கள் செய்ய சொல்வதால் பல ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் இருப்பதால் மாணவர்களின் கல்வியானது பாதிப்படைந்து வருகிறது.

பள்ளிக்கல்வித்துறையானது ஒரு நாளைக்கு பல மெயில்களை அனுப்பி டேட்டா கேட்கிறது. இதனால் தினந்தோறும் அந்த வேலைகளைச் செய்யவே பல ஆசிரியர்களுக்கு வேலை சரியாக போய்விடுகிறது. மாணவர்களின் படிப்பு என்னாவது?.

பள்ளிக்கல்வித்துறையின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பதில் கடிதத்தினை ஒவ்வொரு பள்ளியும் அனுப்ப வேண்டியிருப்பதால் மாவட்ட கல்வி அலுவலகத்தின் சார்பில் அனுப்பப்படும் கடிதத்திற்கு பதில் அனுப்பும் வேலைகளை பெரும்பாலும் ஆசிரியர்களே செய்கின்றனர். ஒரு சில பள்ளிகளில் மட்டும் ஆபீஸ் வேலைகளுக்கு பணியாளர்கள் உள்ளனர். பல பள்ளிகளில் பணியாளர்கள் இல்லாததால் அந்த வேலைகளை ஆசிரியர்களே செய்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வியானது பெருமளவில் பாதிப்படைகிறது. இதுபோல் பல பிரச்னைகளுக்கு ஆசிரியர்கள் ஆளாவதால் அவர்கள் பெரும் மன உளைச்சலில் சிக்கி தவிப்பதுதான் ஹைலைட்டான விஷயம்.

any change in school of education, teachers depressed?


பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி அறிவிப்புகளால் பல வேலைகளை செய்த பின்னர் கற்பிக்க பாடம் பயில முடியாத நிலையில் மனஉளைச்சலில் ஆசிரியர் (கோப்பு படம்)

any change in school of education, teachers depressed?

ஆசிரியர்களுக்கு மனஉளைச்சல்

தமிழகத்தினைப் பொறுத்தவரை பல வருடங்களுக்கு முன்பாக ஆசிரியர் வேலைக்காக வீடு தேடிச் சென்று பணி வழங்கிய காலம் உள்ளது. அதற்கு பிறகு எம்ப்ளாய்மென்ட் சீனியாரிட்டி அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது. தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனங்கள் நடந்து வருகிறது.

ஆசிரியப்பணி என்றால் அறப்பணி என்று சொல்வார்கள். ஆனால் இதன் நிலையானது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. ஏனென்றால் பள்ளி நேரம் முடிந்து மாணவர்களின் மற்ற நேரத்தில் நடக்கும் செயல்பாடுகளுக்கும் ஆசிரியரே காரணம் என செய்திகள் உலா வருவதால் ஆசிரியப்பணி என்பது தற்போது பிரச்னையான பணியாகிவிட்டதோடு பெருத்த மனஉளைச்சலையும் ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.

அதிரடி அறிவிப்புகள்

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நாள்தோறும் வெளியிடப்படும் அறிவிப்புகளைக் கண்டு ஆசிரியர்கள் பதறுகின்றனர். காரணம் பள்ளிக்கல்வித்துறை கேட்கும் தகவல்களைத்திரட்டித் தருவதோடு இவர்கள் எடுக்கும் வகுப்பின் தேர்ச்சி சதவீதம் குறையாலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கின்றது ஆசிரியர் குலம்.

இதுமட்டும் அல்லாமல் ஆண்டுதோறும் நடக்கும் முழு ஆண்டுத் தேர்வில் முழுத்தேர்ச்சி காண்பிக்க வேண்டும். பள்ளியில் கற்பித்தலின் போது இதுபோன்ற செயல்பாடுகளை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நாளுக்கு நாள் ஒரு அறிவிப்பு வெளியாவதால் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கவே பல பகீரத பிரயத்தனங்களை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு இக்காலஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

அதுமட்டும் அல்லாமல் மெல்லகற்கும் (ஸ்லோ லர்னர்ஸ்)தனி வகுப்புகள் எடுத்து அவர்களையும் விரைவாக கற்கும் நிலைக்கு கொண்டு வர ஆசிரியர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் சொல்லி மாளாது. இதுபோல் பலபிரச்னைகளை நாள்தோறும் சந்திப்பதால் ஆசிரியர் பணி என்பது உண்மையாகவே அறப்பணியாகி விட்டதுதான் உண்மை. பள்ளி நேரம்போக, அதிக நேரம் எடுத்து பள்ளிக்கல்வி்த்துறையின் கேள்விகளுக்கு விடையளிக்கும் நிலையே தற்காலத்தில் நடைமுறையாகிவருகிறது.

பள்ளி நேரம் போக கூடுதல் நேரத்தினை வீட்டில் ஆசிரியர்கள் செலவழித்தால்தான் தற்கால பிள்ளைகளுக்கு கற்பிக்கும் பணியானது செவ்வனே நடக்கும் என்ற நோக்கில் ஆசிரியர்கள் என்பவர்கள் வாழ்க்கு முழுவதும் கற்பிப்பதோடு கற்கவும் தொடங்கிவிட்டார்கள். இதனால் அவர்களுக்கு ஓய்வு நேரம் என்பது குறுகிப்போய்விட்டது. இதனால் பலஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு வருவதும் வாடிக்கையான நிகழ்வாகி வருகிறது. அவர்களுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மனம் சார்ந்த பயிற்சிகளை அளிப்பதும் கவுன்சிலிங் அளிப்பதும் அவர்களுடைய ஆரோக்யத்தையும் மனநலத்தையும் காப்பதாக அமையும்.

மனஉளைச்சலால் மரணம்

அண்மையில் சேலம் மாவட்டத்தில் இரு ஆசிரியர்கள் அவர்களுடைய பணி நேரத்திலேயே மரணம் அடைந்தது சக ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் ஆசிரியர்களின் மீது பள்ளிக்கல்வித்துறை திணிக்கும் வேலைகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டால் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களின் கற்பித்தலின் மீது அதிக அக்கறை காட்டி தேர்ச்சி சதவீதத்தினையும் அதிகரிப்பார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. வேலை இல்லா பட்டதாரிகளை தற்காலிகமாக தொகுப்பு சம்பளத்தில் நியமித்து அவர்களை களப்பணியாற்றி பள்ளி, பள்ளியாக தகவலைத் திரட்டச்சொல்லலாமே? .... (இன்னும் வளரும்....)

Updated On: 26 Nov 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...